ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

மிக அதிக வேகத்தில் இயங்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் பைக் தற்போது வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மின்சார பைக்கின் உச்சபட்ச வேகம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது. இப்பைக்கின் சிறப்பு வசதிகள் குறித்த முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு என்கிற கருத்து நம்மில் பலர் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், அவை பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் என்பதை பலர் அறியாமல் இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் எலெக்ட்ரிக் பைக் தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

கனடா நாட்டைச் சேர்ந்த ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஹைபர்ஃபைட்டர் கோலோஸ்ஸஸ் (HyperFighter Colossus) எனும் எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2022-லேயே இந்த பைக்கை நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது மிக அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் பைக்காகும்.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

ஸ்போர்ட்ஸ் பைக்குளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிக வேகத்தில் இது பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. மணிக்கு அதிகபட்சமாக 273 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது இந்த பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் திறன் இதுவாகும். இத்தகைய அதிகபட்ச திறன் கொண்ட இ-பைக்கையே கனட நிறுவனம் வெளியீடு செய்து வைத்திருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

டேமன் மோட்டார்ஸ் (Damon Motors) நிறுவனமே இந்த மின்சார பைக்கை உருவாக்கிய நிறுவனம் ஆகும். அதிக வேகத்தையும், அதே நேரத்தில் பசுமை இயக்கத்தை விரும்பும் இருசக்கர வாகன விரும்பிகளுக்கு இந்த பைக் மிக சிறப்பான தேர்வாக அமைய இருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மிக அதிக வேகத்தில் இயங்கும் வாகனம் மட்டுமில்லைங்க. இது ஓர் மிக அழகிய இ-பைக்காகவும் காட்சியளிக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இது படு கவர்ச்சியான தோற்றம் கொண்ட இ-பைக்காக இருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

எலெக்ட்ரிக் பைக்கில் 20 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 235 கிமீ பயணிக்க முடியும். இத்துடன், ஹைபர்ஃபைட்டர் கோலோஸ்ஸஸ் இ-பைக்கில் 200 எச்பி பவரை வெளியேற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

மேலும், இந்த மின் மோட்டார் வெறும் 3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், கவர்ச்சி, அதிக ரேஞ்ஜ் மற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்ட வாகனமாக ஹைபர்ஃபைட்டர் கோலோஸ்ஸஸ் இ-பைக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி இது அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காகவும் இது காட்சியளிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கேமிராக்கள் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமிரா 360 டிகிரி பார்வை திறன் கொண்ட அட்வான்ஸ்ட் கேமிராவாகும். இது பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்படும். மேலும், சென்சார்கள் வாயிலாக ஆபத்து குறித்த எச்சரிக்கையை அதன் பயனருக்கு அது வழங்கும்.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

தற்போது இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கான முன் பதிவுகள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவிலேயே புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது மிக அதிக தொகையாகும். ஆகையால், பெரும்பாலானோரைக் கவர வாய்ப்பில்லை என்கிற காரணத்தினால் டாமன் மோட்டார்ஸ் நிறுவனம் இரு விலை குறைவான இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்களையே மிஞ்சிடும் போல... 3 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் மின்சார பைக்!

அதேநேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவிற்கு வருவதும் சந்தேகமே. ஆனால், இதுமாதிரியான கவர்ச்சியான தோற்றம் கொண்ட இ-பைக்குகள் இந்தியாவில் தற்போது வருகை தர தொடங்கியிருக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் இதைவிட பல மடங்கு கவர்ச்சியான இ-வாகனங்கள் இந்திய சந்தையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Canadian startup damon motors unveils hyperfighter colossus electric sports bike in ces 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X