ரூ.64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! 150 கிலோவைகூட இது அசால்டா கையாளும்!

கிரயான் மோட்டார்ஸ், ஸ்நோவ்-ப்ளஸ் எனும் குறைந்த வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான கிரயான் மோட்டார்ஸ் (Crayon Motors), அதன் குறைந்த வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஓர் புதுமுக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஸ்நோவ்-ப்ளஸ் (Snow+) எனும் பெயர் கொண்ட மின்சார ஸ்கூட்டரையே நிறுவனம் தற்போது விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

இதற்கு அறிமுக விலையாக ரூ. 64 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் பொருட்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இது உச்சபட்சமாகவே மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

இந்த திறனை வெளிப்படுத்துவதற்காக ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 48/60V VRLA லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஓர் முழுமையான சார்ஜில் எத்தனை கிமீ ரேஞ்ஜ் வழங்கும் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

ஸ்நோவ்-ப்ளஸ் குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகக் காட்சியளித்தாலும் அதில் சிறப்பம்சங்களுக்குச் சற்றும் குறைச்சலில்லை. ஜியோ டேக்கிங், ஸ்டைலிஷான எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்டவை இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

இதுமட்டுமின்றி, மிகச் சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு இ-ஏபிஎஸ் (Electronic - Assisted Braking System) ரீஜெனரேட்டிவ் எனெர்ஜி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு முறையும் பிரேக் பிடிக்கும்போது கணிசமான பவரை மீட்டு தர உதவும்.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லோடிங் கெபாசிட்டி 150 கிலோவாகும். மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நான்கு விதமான நிற தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். சூப்பர் வெள்ளை, கிளாசிக் சாம்பள், சன்ஷைன் மஞ்சள் மற்றும் ஃபியரி சிவப்பு ஆகிய நிற தேர்வுகளிலேயே ஸ்நோவ்-ப்ளஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

இது போன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளுடனேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் இயக்கத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றும் வகையில் பெரிய பூட் ஸ்பேஸ், கம்ஃபோர்ட்டான இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

இந்த இ-ஸ்கூட்டரின் அறிமுகத்தைத் தொடர்ந்து இன்னும் இரு புதிய மாடல்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க கிரயான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இவ்விரு புதுமுக மின் வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 64 ஆயிரம் விலையில் கிரயான் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... 150 கிலோ வரை இது அசால்டாக கையாளும்!

மேலும், இரண்டும் அதி-வேக எலெக்ட்ரிக் வாகனங்களாக வர இருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு தகவலாக இருக்கிறது. டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், பீகார் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் ஸ்நோவ்-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 8, 2022, 19:23 [IST]
English summary
Crayon motors launches e scooter snow plus in india at 64000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+