யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

டுகாட்டி இந்தியாவில் அதன் புதிய மோட்டார்சைக்கிளாக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 -ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

உலகளவில் பிரபலமான லக்சரி மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி இந்தியாவில் விற்பனையில் உள்ள அதன் பைக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே தற்போது புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 மோட்டார்சைக்கிளை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

டுகாட்டியின் புதிய நாக்டு மோட்டார்சைக்கிளாக களமிறக்கப்பட்டுள்ள ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மோட்டார்சைக்கிளையே பெரிதும் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 ஒத்து காணப்படுகிறது.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

அதாவது, முன்பக்க ஹெட்லைட் பகுதி, பெட்ரோல் டேங்கிற்கு இரு பக்கங்களிலும் இருக்கும் பேனல்கள், இருக்கை அமைப்பு என பெரும்பாலான பாகங்களை ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4-இல் இருந்தே பெற்று புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2-இல் டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. இரண்டிலும் வேறுப்படும் பாகங்கள் என்று பார்த்தால், என்ஜினும், எக்ஸாஸ்ட் குழாயும் தான்.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

ஏனெனில் வி2 மாடலை காட்டிலும் வி4 மாடல் ஆனது சற்று ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது. புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2-இல் எக்ஸாஸ்ட் குழாய் மிகவும் சிறியதாக, மேல்நோக்கி வளைக்கப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது. அதுவே ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4-இல் எக்ஸாஸ்ட் குழாய் ஆனது மிகவும் சிறியதாகவே உள்ளது என்றாலும், சற்று வேறுப்பட்ட வடிவில் கீழ்நோக்கி பார்க்கப்பட்டதாக பொருத்தப்படுகிறது.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கில் 955சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜினை டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-இல் 153 பிஎச்பி மற்றும் 9,000 ஆர்பிஎம்-இல் 101 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் அமைப்பில் டுகாட்டியின் விரைவு ஷிஃப்ட் அப்/டவுன் எவோ 2 சிஸ்டம், ஈரமான க்ளட்ச் உள்ளிட்டவை அடங்குகின்றன.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

இவற்றுடன், பிரேக் கொடுக்கும்போது பைக் ஸ்லிப் ஆகுவதை தவிர்க்கும் ஆண்டி-ஹோப்பிங் மற்றும் பிரோக்ரெசீவ் சர்வோ சிஸ்டம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களும் இந்த புதிய டுகாட்டி நாக்டு பைக்கில் உள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ-இல் விட்டம் கொண்ட முழுவதும் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய ஷோவா பிபிஎஃப் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

அதுவே பின்பக்கத்தில் முழுவதும் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய சாஸ் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சாஸ் ஸ்டேரிங் டேம்பரையும் இந்த பைக் கொண்டுள்ளது. ரூ.17.25 லட்சம் என்பது புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை என ஏற்கனவே கூறிவிட்டோம். இந்த டுகாட்டி பைக், கருப்பு நிற ரிம்களுடன் டுகாட்டி சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.ஸ்போர்ட், ரோடு, வெட் என 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த டுகாட்டி பைக்கில் உள்ளன.

யப்பா என்னா ஸ்டைலு... டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்!! நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும்!

பெட்ரோல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டிருக்க, மைய கன்சோல் பகுதியில் 4.3 இன்ச்சில் டிஎஃப்டி முழு-வண்ண திரை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் உள்ள அனைத்து டுகாட்டி டீலர்ஷிப் மையங்களிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டுகாட்டியின் டீலர்ஷிப் மையங்கள் டெல்லி-என்சிஆர், மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் உள்ளன. விரைவில் இந்த பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 26, 2022, 18:53 [IST]
English summary
Ducati launched new streetfighter v2 in india find here all details
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+