இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

டுகாட்டி இந்தியா நிறுவனம் ரூ.26.49 லட்சத்தில் அதன் பிரபலமான சூப்பர்பைக்கான பனிகளே வி4-இன் 2022 வெர்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த புதிய டுகாட்டி பைக்கில் அப்படி என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இந்தியாவில் டுகாட்டி பிராண்டில் இருந்து பனிகளே வி4 பைக்குகள் மொத்தம் 3 விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வி4, வி4 எஸ் மற்றும் வி4 எஸ்பி2 என்பன அந்த 3 மாடல்களாகும். இவற்றின் 2022ஆம் ஆண்டிற்கான வெர்சன்கள் முறையே ரூ.26.49 லட்சம், ரூ.31.99 லட்சம் மற்றும் ரூ.40.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

அதாவது 2022 டுகாட்டி பனிகளே வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.26.49 லட்சம். 2022 பனிகளே வி4 எஸ் பைக்கின் விலை ரூ.31.99 லட்சம் மற்றும் 2022 பனிகளே வி4 எஸ்பி2 பைக்கின் விலை ரூ.40.99 லட்சமாகும். இவை மூன்றின் விலைகளும் அவற்றின் 2021ஆம் ஆண்டிற்கான வெர்சன்களின் விலைகளை காட்டிலும் தலா ரூ.3 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இந்த புதிய பனிகளே வி4 பைக்குகளின் தோற்றம் அவற்றின் முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே உள்ளது. இருப்பினும் 2022 பனிகளே வி4 பைக்குகளின் தோற்றம், ஏரோடைனாமிக்ஸ், என்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக டுகாட்டி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இதன்படி, பைக்குகளின் முன்பக்க பேனல்கள் முன்பை காட்டிலும் தற்போது அளவில் நன்கு சிறியதாக மற்றும் மெல்லியதாக பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மணிக்கு 300கிமீ வேகத்தில் செல்லும்போதும், தரையை நோக்கிய விசை ஆனது 37 கிலோ என்ற அளவில் கிடைக்குமாம். பைக்குகளின் சக்கரங்கள் தற்போது மார்சேஷினி ஃபோர்க்டு அலுமினியத்தால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இதனாலேயே பைக்கின் எடை ஆனது கணிசமாக குறைந்துள்ளது. சக்கரங்கள் மட்டுமின்றி, புதிய பனிகளே வி4 பைக்குகளின் எடை குறைப்பதற்காக முன்பக்க ஃபெண்டர், விங்ஸ் மற்றும் ஹீல் கார்ட்ஸ் உள்ளிட்டவற்றையும் கார்பன் ஃபைபர் பாகங்களால் தயாரித்து டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. இவற்றுடன் புதிய க்ளட்ச் அமைப்பை இந்த 2022 பைக்குகளில் டுகாட்டி வழங்கியுள்ளது.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இந்த புதிய க்ளட்ச் அமைப்பை எஸ்டிஎம்-எவோ எபிகே 9-டிஸ்க் உலர் க்ளட்ச் என டுகாட்டி அழைக்கிறது. 2022 பனிகளே வி4 பைக்குகளில் 1,103சிசி, வி4-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, டெஸ்மோஸ்டிசி ஸ்ட்ராடேல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 212.5 பிஎச்பி மற்றும் 9,500 ஆர்பிஎம்-இல் 123.6 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

இந்த என்ஜின் ஆனது புதிய கியர் விகிதங்கள் & பை-டைரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்டரை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டுகாட்டி பனிகளே வி4 பைக்குகளில் ஏற்கனவே 2 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றுடன் கூடுதலாக 2 ரைடிங் மோட்களை டுகாட்டி நிறுவனம் சேர்த்துள்ளது. இதனால் ரைடிங் மோட்களின் எண்ணிக்கை லோ, மீடியம், ஹை & ஃபுல் என 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

பொதுவாகவே ரைடிங் மோட்கள் பைக்கின் ரைடிங் பண்பை மாற்றக்கூடியன. அப்படியிருக்கையில், மேற்கூறப்பட்ட 4 ரைடிங் மோட்கள் புதிய பனிகளே வி4 பைக்குகளின் வெவ்வேறான பண்புகளில் மாற்றங்களை செய்யக்கூடியன என டுகாட்டி தெரிவித்துள்ளது. டுகாட்டி பைக்குகள் என்றாலே அவற்றில் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கும். அதிலிலும் இவை பனிகளே வி4 என்ற மிகவும் விலையுயர்ந்த டுகாட்டி பைக்குகள், அப்படியென்றால் சொல்லவா வேண்டும்.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

2022 பனிகளே வி4 பைக்குகளில் டயர் காலிபிரேஷன், வீலிங் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல், பவர் லாஞ்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல், போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் என்ஜின் பிரேக் கண்ட்ரோல் என ஏகப்பட்ட எலக்ட்ரானிக் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு எலக்ட்ரானிக் பாகங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டாலும், பைக்குகளின் அலங்கார பாகங்களில் பெரியதாக மாற்றமில்லை.

இந்தியாவில் வரிசையா புது புது டுகாட்டி பைக்குகள்...!! ரூ.26.49 லட்சத்தில் புதிய பனிகளே வி4 பைக்குகள் அறிமுகம்!

அதாவது பருத்த வடிவிலான பெட்ரோல் டேங்க், எல்இடி டிஆர்எல்-கள் உடன் இரட்டை-பேட் எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை-பக்க ஸ்விங்கார்ம் மற்றும் பைக்கிற்கு அடியில் மிகவும் சிறிய அளவில் எக்ஸாஸ்ட் குழாய் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதனாலேயே 2022 பனிகளே வி4 பைக்குகளின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்த பைக்குகளை நீங்கள் ஓட்டி பார்த்தால், நிச்சயம் வேறுபாடுகளை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 30, 2022, 19:57 [IST]
English summary
Ducati launched updated panigale v4 series in india find here price and changes
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+