21 லட்ச ரூபா எல்லாம் ரொம்ப ஓவருங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! இப்பவே கண்ண கட்டுதுல!

டுகாட்டி (Ducati) நிறுவனம் ரூ. 21.30 லட்சம் மதிப்புள்ள பனிகேல் வி2 பேலிஸ் (Panigale V2 Bayliss) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

டுகாட்டி (Ducati) நிறுவனம் அதன் புதுமுக பைக் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பனிகேல் வி2 பேலிஸ் (Panigale V2 Bayliss) எனும் மாடலையே அது அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் மிக மிக அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ரூ. 21.30 லட்சம் என்ற விலையே பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது வழக்கமான டுகாட்டி பனிகேல் வி2 பைக்கைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. வழக்கமான பனிகேல் வி2 பைக் இந்தியாவில் ரூ. 17.49 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், வழக்கமான பனிகேல் வி2 பைக்கைப் போல் புதிய பனிகேல் வி2 பேலிஸ் வெகு நாட்களுக்கு விற்பனைக்குக் கிடைக்காது. ஏனெனில், இது ஓர் சிறப்பு எடிசன் பைக்காகும். குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இப்பைக்கை விற்பனைச் செய்ய உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

ஆனால், எத்தனை யூனிட் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை டுகாட்டி நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பனிகேல் வி2 பேலிஸ் பைக் சிறப்பு அலங்காரப் பொருட்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

ஆகையால், வழக்கமான பனிகேல் வி2-வைக் காட்டிலும் பல மடங்கு அழகான மற்றும் கவர்ச்சியான பைக்காக அது காட்சியளிக்கின்றது. சிவப்பு நிறத்தால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், பச்சை மற்றும் வெள்ளை நிற கிராஃபிக்குகள் பைக்கின் மேற்புற உடல்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இவையே வழக்கமான பனிகேல் வி2-விடமிருந்து சிறப்பு பதிப்பு பனிகேல் வி2 பேலிஸை மாறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த பைக்கை ட்ராய் பேலிஸ் எனும் நபருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக டுகாட்டி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ட்ராய் பேலிஸ் என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோட்டார்சைக்கிள் ரேசர் ஆவார்.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இவரின் ரேஸ் நம்பர் 21 ஆகும். இந்த எண்ணையே சிறப்பு பதிப்பு பனிகேல் வி2 பைக்கின் பெட்ரோல் டேங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ஸ்டைலை மாற்றக் கூடிய அம்சங்கள் மட்டுமே இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் பெரியளவில் பார்க்க முடியவில்லை.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

பனிகேல் வி2 பேலிஸ் பைக்கில் 955 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, ட்வின் சிலிண்டரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 152.9 பிஎச்பி பவரை 10,750 ஆர்பிஎம்மிலும், 104 என்எம் டார்க்கை 9,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இவற்றுடன் பைக்கை அலங்கரிக்கும் விதமாக புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், 4.3 இன்ச் அளவுள்ள வண்ண டிஎஃப்டி திரை, கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம் எக்சாஸ்ட் கவர், குயிக் ஷிஃப்டர் மற்றும் 3 விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ரேஸ், ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் ஆகிய ரைடிங் மோட்களே பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ. 21 லட்சம் எல்லாம் ரொம்ப அதிகமுங்க... இது காரோட விலை இல்ல படத்துல இருக்க பைக்கோட விலை! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல?

இதுதவிர, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், எஞ்ஜின் பிரேக் கன்ட்ரோல், பவர் மோட்கள், வீலி கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் கேலிபரேசன் உள்ளிட்ட அம்சங்களும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன காரணத்தினாலேயே பனிகேல் வி2 பேலிஸ் பைக் மிக மிக அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 18:43 [IST]
English summary
Ducati launches panigale v2 bayliss bike in india at inr 21 30 lakh
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+