சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

டுகாட்டி நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி, அதன் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. நிறுவனம் வி21எல் எனும் சூப்பர் ரக எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருகின்றது. இந்த பைக்கே சாலையில் செல்லுகின்ற மாதிரியான வீடியோவையே டுகாட்டி தற்போது வெளியிட்டுள்ளது.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

மோட்டோ இ என்கிற பெயரில் இப்பைக்கை அறியப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் சார்ந்து டுகாட்டி நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் அண்மையில் பைக்கின் முழு வேக திறன், இயக்க அனுபவம், தொழில்நுட்ப அம்சங்களின் இயக்கம் உள்ளிட்டவை பரிசோதித்து பார்க்கப்பட்டன.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வெளியாகியுள்ளது. இதனை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக வெளியீட்டுள்ளது. முன்னாள் உலக சாம்பியன்ஷிப் ரைடர் அலெக்ஸ் டி ஏஞ்சலிஸே கொண்டே மோட்டோ இ பரிசோதித்து பார்க்கப்பட்டிருக்கின்றது.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

உலகக் கோப்பை போட்டியில் பங்குகொள்வதற்காக இப்பைக்கை டுகாட்டி நிறுவனம் மிக தீவிரமாக தயார்படுத்தி வருகின்றது. எனவே, டுகாட்டி நிறுவனம் இப்பைக்கின் உற்பத்தி பணிகளை 2023ம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இந்த நிலையிலேயே பைக்கின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பரிசோதனைகள் பைக்கின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும் மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், இந்த பைக் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் இந்திய வருகை பற்றிய விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் புதுமுகங்களை இந்தியா கொண்டு வருவதில் டுகாட்டி நிறுவனம் எந்தவொரு தயக்கத்தையும் காண்பிக்கவில்லை. அந்தவகையில், அண்மையில் 21 லட்ச ரூபா மதிப்புள்ள புதிய பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் டுகாட்டி அறிமுகப்படுத்தியது.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

பனிகேல் வி2 பேலிஸ் எனும் மாடலையே நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 21.30 லட்சம் ஆகும். இதன் வழக்கமான மாடல் ரூ. 17.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை விட அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாகவே வி2 பேலிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சிறப்பு அலங்காரப் பொருட்களால் இப்பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பச்சை-வெள்ளை கிராஃபிக், புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ரேஸ் வீரரின் 21ம் எண் உள்ளிட்டவை சிறப்பு அலங்காரங்களாக வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், 4.3 இன்ச் அளவுள்ள வண்ண டிஎஃப்டி திரை, கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம் எக்சாஸ்ட் கவர், குயிக் ஷிஃப்டர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

சத்தமே இல்லாம இவ்ளோ வேகமா!.. தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை முதன்முறையாக காட்சிப்படுத்திய பிரபல நிறுவனம்!

ரேஸ், ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களும் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. டுகாட்டி நிறுவனம் இந்த பைக்கில் 955 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, ட்வின் சிலிண்டரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 152.9 பிஎச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2022, 14:50 [IST]
English summary
Ducati showcases v21l electric race bike
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+