மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

டுகாட்டி நிறுவனம் அதன் விலையுயர்ந்த பைக் மாடலான ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ (Ducati Hypermotard 950 RVE)-யை டெலிவரி வழங்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

பிரபல பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி அதன் புதுமுக இருசக்கர வாகன மாடலான ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ (Ducati Hypermotard 950 RVE)-யை டெலிவரி கொடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் உள்ள டுகாட்டி இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சில யூனிட்டுகள் ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ பைக்கை டெலிவரி கொடுத்ததன் வாயிலாக இந்த தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இந்தியாவில் ஹைபர்மோடார்ட் 950 பைக் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஹைபர்மோடார்ட் 950 ஆர்விஇ மற்றும் ஹைபர்மோடார்ட் 950 எஸ்பி ஆகியவையே அவை ஆகும். இதில், ஆர்விஇ எனும் வேரியண்டிற்கு 12 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயும், எஸ்பி எடிசனுக்கு 16 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

எஸ்பி எடிசனானது ஆர்விஇ வேரியண்டைக் காட்டிலும் மிக அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. எனவேதான் அது மட்டும் பல மடங்கு அதிக விலையைக் கொண்டதாகக் கட்சியளிக்கின்றது. அதாவது, எஸ்பி எடிசனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து உடற் பாங்களும், கருவிகளும் மிக மிக உயர் தரத்திலானவை ஆகும்.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமானதாக உள்ளது. ஹைபர்மோடார்ட் 950 பைக்கில் பிஎஸ்6 தர 937 சிசி தர எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 112.4 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இரு வேரியண்டிலும் இந்த எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இதேபோல், இரட்டை எக்சாஸ்ட் அமைப்பு இருக்கைக்கு அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் பின்னழகை பன் மடங்கு கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் இருக்கின்றது. இத்துடன், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், ட்ரெல்லிஸ் சப் ஃப்ரேம், அகலமான ஹேண்டில் பார், ஃபிளாட்டான இருக்கை, 17 இன்ச் அளவுள்ள வீல்கள் மற்றும் க்னக்கில் குவார்ட்டுகள் உள்ளிட்டவையும் ஹைபர்மோடார்ட் 950 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இதுதவிர, இன்னும் சில அம்சங்களும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் இவிஓ (பிரேக்கிங் அம்சத்திற்காக), டுகாட்டி டிராக்சன் கன்ட்ரோல், டுகாட்டி சேஃப்டி பேக், டுகாட்டி வீலி கன்ட்ரோல் மற்றும் டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப்/டவுண் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட பைக்கையே நிறுவனம் தற்போது டெலிவரி செய்யத் தொடங்கியிருக்கின்றது. இந்த பைக்கில் மிக சிறந்த இழுவை திறனைப் பெற வேண்டும் என்பதற்காக பைரல்லி டையப்ளோ ரோஸ்ஸோ III டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன் பக்கத்தில் 120/70 இசட்ஆர் 17 அளவுள்ள டயரும், பின் பக்கத்தில் 180 /55 /55 இசட்ஆர்17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இதுபோன்று பிரீமியம் தர அம்சங்கள் பலவற்றை ஹைபர்மோடார்ட் 950 பைக் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர கார்களின் விலையைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்ட இப்பைக் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் சமீபத்தில் மாருதியின் பிரீமியம் தர காரான பலேனோ விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மிக மிக விலையுயர்ந்த பைக்கின் டெலிவரியை தொடங்கியது டுகாட்டி! இதோட விலைக்கு 2 பலேனோ காரையே வாங்கலாம்!

இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 6.35 லட்சம் ஆகும். இதன் இரண்டு யூனிட்டுகளின் விலையை அடக்கியதாகவே டுகாட்டி ஹைபர்மோடார்ட் 950 பைக்கின் விலை இருக்கின்றது. எனவேதான் பலர் இந்த விலையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

இந்த பதிவில் பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 25, 2022, 11:12 [IST]
English summary
Ducati started deliveries of hypermotard 950 in india
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+