சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! செம்ம வேகத்துல போகுமாம்!

சூப்பரான வேகத்தில் செல்லக் கூடிய இ-சைக்கிளை அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று வெளியீடு செய்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

மாடல் எஃப் (Model F) என பெயரிடப்பட்டிருக்கும் புதுமுக இ-சைக்கிள் ஒன்று உலக மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருப்பது இந்த இ-சைக்கிளின் சிறப்பம்சமாக காட்சியளிக்கின்றது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் பைக் கம்பெனி (Electric Bike Company) எனும் நிறுவனம் இந்த சூப்பரான ஸ்டைலிலான எலெக்ட்ரிக் சைக்கிளை தயாரித்திருக்கும் நிறுவனம் ஆகும்.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

இந்த இ-சைக்கிளின் உருவாக்கத்திற்காக எலெக்ட்ரிக் பைக் கம்பெனி ஹைட்ரோஃபார்ம் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட சேஸிஸை பயன்படுத்தியிருக்கின்றது. மேலும், 24 அங்குல வீல்கள் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீல்களில் சற்றே குண்டான தோற்றம் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த டயர்கள் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

மூன்று அங்குல அகல டயரே மாடல் எஃப் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இ-சைக்கிளில் மிக முக்கியமான வசதியாக மடித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக இ-சைக்கிளை எளிதில் நோட்டு புத்தகம் போல் மடித்து வைத்துக் கொள்ள முடியும். ஆகையால், பயன்பாடில்லாத நேரங்களில் இ-சைக்கிளை நிறுத்தி வைக்க பெரியளவில் இடம் தேவைப்படாது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

இதுமட்டுமின்றி, இ-சைக்கிளின் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. முன் பக்க வீலிலேயே இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. இவை மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தைப் பெற உதவியாக இருக்கின்றன. இத்துடன், பேட்டரி தீர்ந்துவிட்டாலும் பயமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக பெடலிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

மாடல் எஃப் எலெ்க்ட்ரிக் சைக்கிளில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சைக்கிளின் ஃப்ரேமுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். இதனை தேவை எனில் வெளியில் கழட்டி எடுத்துக் கொள்ள முடியுமாம். இதற்காக லாக்கிங் வசதி பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கின்றது. மேலே பார்த்த ரேஞ்ஜ் திறனை பெடல் அசிஸ்ட் ஊடாகவே பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

அதேவேலையில், முழு அளவில் எலெக்ட்ரிக் பவர் மோடில் பயணிக்கும்போது பெடல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என எலெக்ட்ரிக் பைக் கம்பெனி தெரிவித்துள்ளது. இந்த மாதிரியான சூழலில் முழு சார்ஜில் 40 கிமீ தூரம் வரை மட்டுமே அது ரேஞ்ஜ் தரும். இ-சைக்கிளில் 750 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது மணிக்கு 40 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

இந்தியாவில் இந்த வேகத்தில் ஓர் வாகனம் இயங்கும் என்றால் அந்த வாகனத்தை இயக்க கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கூடவே வாகன பதிவு மற்றும் காப்பீடு போன்றவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சிறுவர்களுக்கும் இந்த சைக்கிளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

இந்தியாவில் மணிக்கு 25 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு வாகன போக்குவரத்து விதிகள் அனைத்தும் பொருந்தும். அதற்கு கீழான வேகத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு ஆவணங்கள் அத்திாயவசியமற்றது ஆகும். ஆகையால், அமெரிக்க மின் வாகன உற்பத்தி நிறுவனத்தின் மாடல் எஃப் எலெக்ட்ரிக் சைக்கிள் இந்தியா வருவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது.

சின்ன பசங்களால இந்த எலெக்ட்ரிக் சைக்கிள ஓட்ட முடியாது... ஓட்டவும் விட மாட்டாங்க! எதிர்பார்த்திராத வேகத்தில் ஓட கூடிய இ-சைக்கிள்!

குறிப்பு: இந்த பேட்டரியின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

அதேநேரத்தில், இ-சைக்கிளில் அதிக வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரக பிரேக்குகள் மிக சூப்பரான பிரேக்கிங்கை வழங்க உதவியாக இருக்கும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இ-சைக்கிளின் உச்சபட்ச வேகத்தைகூட கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வர இந்த பிரேக்கிங் சிஸ்டம் உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 23, 2022, 8:30 [IST]
English summary
Electric bike company model f can go tops at 40 kmph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+