இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

இமோட்டாராட் நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் இரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் இமோட்டாராட் (EMotorad). இந்நிறுவனம் இஎம் (EM) என இந்திய வாகன உலகில் அறியப்படுகின்றது. இந்த நிறுவனமே தற்போது இந்திய சந்தையில் இரு புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

இரண்டும் மேட் இன் இந்தியா தயாரிப்பாகும். மேட் இன் இந்திய தயாரிப்புகளை அரசு ஊக்குவித்து வரும் நிலையில் நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு இரு புதுமுகங்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

லில் இ (Lil E) என்கிற கிக் ஸ்கூட்டர் மாடலையும், டி-ரெக்ஸ்-ப்ளஸ் (T-Rex+) எனும் புதுமுக இ-சைக்கிளையுமே நிறுவனம் இன்று (ஏப்ரல் 8) விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், லில் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டருக்கு ரூ. 29,999 என்ற விலையையும், டி-ரெக்ஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 49,999-யும் இமோட்டாராட் நிர்ணயித்துள்ளது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் இமோட்டாராட் நிறுவனத்தின் டி-ரெக்ஸ் (T-Rex), இஎம்எக்ஸ் (EMX) மற்றும் டூடுள் (Doodle) ஆகிய தயாரிப்புகளுடன் சேர்த்து தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் இரு புதுமுகங்களும் இனி வரும் காலங்களில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

தற்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக டி-ரெக்ஸ் காட்சியளிக்கின்றது. இதனை சென்ற ஆண்டே நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு ரூ. 45 ஆயிரம் என்ற விலையை அப்போது அது நிர்ணயித்தது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பிரத்யேக இஎம்ஐ திட்டங்களை இ-மோட்டாராட் அறிவித்தது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே புதிதாக இரு புதுமுக வாகனங்களை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதில், லில் ஸ்கேட்டிங் ரக மின்சார கிக் ஸ்கூட்டராகும். சுற்றுலா தளம், பொழுதுபோக்கு பயணங்கள் மற்றும் இதர பயன்பாட்டுகளுக்கு உதவும் வகையில் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், டி-ரெக்ஸ் இ-சைக்கிள் இதைவிட அதிகளவு பலனை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

ஆனால், என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், சில முக்கிய தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. புதிய டி-ரெக்ஸ் ப்ளஸ் இ-பைக் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

இதுவே சைக்கிளின் உச்சபட்ச வேகம் ஆகும். எனவே இ-சைக்கிளை பயன்படுத்த லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதேபோல், பதிவு சான்று போன்ற பிற முக்கிய ஆவணங்களும் தேவைப்படாது. அதேநேரத்தில், சாலை பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் விருப்பத்தின்பேரில் தலைக்கவசம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இமோட்டாராட் நிறுவனத்தின் 2 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... ரெண்டுமே கெத்தான வாகனங்கள்!!

இதேபோல், இதன் லில் இ கிக் ஸ்கூட்டரை தேவைக்கேற்ப மடித்து வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுமாதிரியான பல்வேறு சிறப்பு வசதிகளுடனேயே இரு மின் வாகனங்களும் தற்போது இந்திய சந்தையை வந்தடைந்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2022, 19:56 [IST]
English summary
Em launches lil e kick scooter t rex plus e bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+