பெடல் பண்ணா இவ்ளோ வேகத்துல போக முடியுமா? டூ-வீலர் காதலர்களுக்கு நிச்சயம் இந்த இ-பைக்கை பிடிக்காம இருக்காது!

இ-ராக்கிட் லிமிடெட் எடிசன் 100 (eRockit Limited Edition 100) இ-பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் இ-ராக்கிட் (eRockit). இது லிமிடெட் எடிசன் 100 (Limited Edition 100) எனும் புதுமுக மின்சார வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக ஐரோப்பிய சந்தையில் இவ்வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

ஒவ்வொரு நாளும் உலகின் ஏதேனும் ஓர் மூலையில் மின் வாகனங்கள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்த வழக்கமான மின் வாகனங்களைப் போல் இது இல்லை என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் லிமிடெட் எடிசன் 100 இ-பைக்கின் அறிமுகம் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இதற்கு இருசக்கர வாகனத்தின் வடிவமைப்பு, திறன் மற்றும் அதன் விலை என அனைத்துமே காரணமாக இருக்கின்றன. லிமிடெட் எடிசன் 100 ஓர் பெடல் செய்யும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காகும். இதற்கு 11,850 யூரோக்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் இதன் விலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலையிலேயே இ-பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் காரணத்தினாலயே உலகளவில் பலரின் கவனத்தை இந்த வாகனம் ஈர்த்திருக்கின்றது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இதன் விலை மட்டுமில்லைங்க இ-பைக்கின் செயல்திறனும் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் இருக்கின்றது. இந்த பெடல் வசதிக் கொண்ட வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 89 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுபோன்று மிக உச்சபட்ச வேகத்தில் எந்தவொரு பெடல் கொண்ட இருசக்கர வாகனமும் பயணிக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இதுமட்டுமின்றி, பிற இ-பைக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை போல் இந்த வாகனத்தில் த்ரோட்டில் வசதிக் கொடுக்கப்படவில்லை. பெடல் அசிஸ்டன்ஸ் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது. இந்த அம்சத்திலேயே மணிக்கு 89 கிமீ வேகத்தை வாகனம் எட்டுவது என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய திறனாகப் பார்க்கப்படுகின்றது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இந்த அதிகபட்ச வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லிமிடெட் எடிசன் 100 இ-பைக்கில் 300 மிமீ டிஸ்க் நான்கு பிஸ்டன் காலிபர்கள் வசதியுடன் முன் பக்கத்திலும், 220 மிமீ டிஸ்க் இரட்டை பிஸ்டனுடன் காலிபர்களுடன் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும் வகையில் அட்ஜெஸ்டபிள் 37 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்குடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட இ-ராக்கிட் லிமிடெட் எடிசன் 100 பெடல் இ-பைக்கே தற்போது ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தை கடந்த ஆண்டே நிறுவனம் வெளியீடு செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, இவ்வாகனத்தை இந்தியாவிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

ஆனால், தற்போது வரை இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக பிரீமியம் அம்சங்களை இந்த வாகனம் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் மிக அதிக விலையில் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

பிரீமியம் அம்சங்கள் மட்டுமின்றி 16kW PMSM மின் மோட்டார், 52V 6.6kWh லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்டவை இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் தேவைப்படும். இதேபோல் இ-பைக்கில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டாரானது 5kW பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த வண்டியோட விலைய மட்டும் கேட்டீங்க, அது ஓடுறத-விட வேகமா நீங்க ஓடிடுவீங்க... அதேநேரத்துல சூப்பரான இ-பைக்கா வேற தெரியுது!

இ-ராக்கிட் லிமிடெட் எடிசன் 100 இ-பைக்கில் ஹெட்லைட், கண்ணாடிகள், டிஸ்பிளே, செல்போன் ஹோல்டர்கள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு வசதிகளில் இந்த வாகனம் நம்மை மயக்கும் வகையில் காட்சியளித்தாலும், ஒருவர் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும் என்பது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது. ஆம், வாகனத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்ற வகையில் இருக்கை அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 5, 2022, 16:48 [IST]
English summary
Erockit limited edition 100 is currently on sale in germany
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+