வெளிநாட்லகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்விட்ச் மோட்டோகார்ப் (Svitch MotoCorp) நிறுவனம், அதன் சிஎஸ்ஆர் 762 எலெக்ட்ரிக் பைக்கின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. விரைவில் இந்திய சந்தையில் இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

ஸ்விட்ச் மோட்டோகார்ப் எனும் ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று சிஎஸ்ஆர் 762 எனும் நவீன ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ரூ. 1.65 லட்சம் என்ற குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார்சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேநேரத்தில், இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் பயணிக்க முடியும். இந்த சூப்பரான அதி-வேக இயக்கத்திற்காக சிஎஸ்ஆர் 762 மின்சார பைக்கில் 10 kW மற்றும் 56 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இத்துடன், 110 கிமீ ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 3.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்வாப்பபிள் வசதிக் கொண்ட பேட்டரி ஆகும். அதாவது, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி ஆகும். எனவே, டூ-வீலிரில் இருக்கும் பேட்டரி ஒரு வேலை முழுமையாக சார்ஜ் தீர்ந்துபோகும் எனில் அந்த பேட்டரி ஸ்வாப் மையங்களில் கொடுத்துவிட்டு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பொருத்திக் கொண்டு பயணிக்க முடியும்.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

ஸ்விட்ச் மோட்டோகார்ப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை குஜராத் ஆசிய சிங்கத்தை தழுவி உருவாக்கியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டூ-வீலர் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. மின்சார பைக்கில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட்ஸ், ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் ஆகிய ரைடிங் மோட்களே வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இதுதவிர, 5 அங்குல டிஎஃப்டி வண்ண திரை மற்றும் தெர்மோசைஃபன் கூலிங் சிஸ்டம் ஆகியவையும் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் சிஎஸ்ஆர் 762-வில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் 1430 மிமீ வீல் பேஸ், 780 மிமீ இருக்கை உயரம், 155-200 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

மின்சார பைக்கை அலங்கரிக்கும் விதமாக எல்இடி மின் விளக்கு, பிரத்யேக ஹேண்டில் பார், இதுவரை எந்த பைக்கிலும் கண்டிராத தோற்றத்தில் பேடி பேனல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஹெட்லைட் பகுதியும் புதுவிதமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இத்தகைய சூப்பரான பைக்கையே ஸ்விட்ச் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்து வரும்சூழலில் இந்த அட்டகாசமான இ-பைக்கை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இதன் குறைந்த விலை பலரை இப்பைக்கின் பக்கம் ஈர்க்கும் என தெரிகின்றது. குறிப்பாக, பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் அதிக வெப்பத்தைக் குறைக்க உதவும் தெர்மோசைஃபன் சிஸ்டம் பலரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அண்மைக் காலங்களாக இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் தீ விபத்தில் சிக்கி வருகின்றன.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தீ விபத்தை அச்சத்தைத் தவிர்க்கும் விதமாக இப்புதிய சிஸ்டத்தை ஸ்விட்ச் மோட்டோகார்ப் நிறுவனம் அதன் புதுமுக மோட்டார்சைக்கிளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

வெளிநாட்டுலகூட இப்படி ஒரு ஸ்டைல்ல எலெக்ட்ரிக் பைக் இருக்குமானு தெரியல! இந்திய நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பு!

எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் குறித்து ஸ்விட்ச் மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராஜ்குமார் படேல் கூறியதாவது, "சிஎஸ்ஆர் 762 எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியர்களுக்கென பிரத்யேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டீலர்ஷிப் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதிலும் நாங்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றோம். நாடு முழுவதும் ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பைக் டீலர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை விரைவில் விரிவுபடுத்த உள்ளோம்" என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 1, 2022, 17:07 [IST]
English summary
Ev maker svitch motoCorp announces csr 762 e bike price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+