15ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய், கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சலுகைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட தொடங்கியிருக்கின்றன. இவற்றின் வரிசையில் தற்போது மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

பிரபல எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியாளரான ஈவியம் ஸ்மார்ட் மொபிலிட்டி (EVeium Smart Mobility), அதன் முன்னணி மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சலுகை விலையில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. வரும் பண்டிகை தினத்தில் புதிதாக மின்சார வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

காஸ்மோ (Cosmo), கோமெட் (Comet) மற்றும் சிஸர் (Czar) ஆகிய மின்சார இருசக்கர வாகன மாடல்களுக்கு சிறப்பு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றும் ஸ்கூட்டர் ரக மின்சார வாகனங்களாகும். இதில், தற்போது நிலவரப்படி காஸ்மோ ரூ. 1,39,200 -க்கும், கோமெட் ரூ. 1,84,900 க்கும், சிஸர் மாடல் 2,07,700 -க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

இவற்றின் விலையில் கணிசமான ரூபாயையே ஈவியம் தற்போது குறைத்துள்ளது. அந்தவகையில், காஸ்மோவின் விலையில் ரூ. 12,701 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த மின்சார இருசக்கர வாகனம் தற்போது 1,26,499 க்கு விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோமெட் மாடலின் விலையில் ரூ. 15,401-ம், சிஸர் மாடலின் விலையில் ரூ. 15,201-ம் குறைக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

இந்த விலை தள்ளுபடியானது அக்டோபர் 1 தொடங்கி 31ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என ஈவியம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, ரூ. 999 கட்டணத்தின்கீழ் தங்களது இருசக்கர வாகனங்களை புக் செய்து கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை திட்டம் ஈவியம் நிறுவனத்தின் தயாரிப்பின் பக்கம் வாடிக்கையாளர்களைக் ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

ஈவியம் தற்போது சலுகை அறிவித்திருக்கும் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களுமே சூப்பரான தயாரிப்புகளாக இருக்கின்றன. அதிக தொழில்நுட்ப வசதி, கவர்ச்சியான தோற்றம், நல்ல ரேஞ்ஜை தரும் பேட்டரி பேக் மற்றும் பன்முக நிற தேர்வுகள் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அவை விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

காஸ்மோ:

காஸ்மோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 72V/30Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் சுமார் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். இந்த சூப்பரான வேக திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2000வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈவியம் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒட்டுமொத்தமாக 8 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

அவற்றின் பட்டியல் இதோ:

அர்ஜென்ட் பிளாக் (Argent Black),

கோல்ட் பிளாக் (Cold Black),

பியர் கிரே (Pearl Grey),

மூன் லைட் ஒயிட் (Moonlight White),

சேடின் ரெட் (Satin Red),

ஆரோரல் யெல்லோ (Auroral Yellow),

ஹஸி ப்ளூ (Hazy Blue),

மின்டட் கிரீன் (Minted Green) ஆகிய நிற தேர்வுகளே அவை ஆகும்.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

கோமெட்:

ஈவியம் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 72V/50Ah பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வழங்குகின்றது. இது முழுமையான சார்ஜை எட்ட 4 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த வாகனத்தில் நிறுவனம் 3000 வாட் மின் மோட்டாரை பொருத்தியிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இதேபோல், இதன் ரேஞ்ஜ் திறனும் அதிகம் ஆகும். ஓர் முழு சார்ஜில் 150 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த மின்சார ஸ்கூட்டரையும் ஈவியம் நிறுவனம் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

சிஸர்:

நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல் என இதனை கூறலாம். எக்கசக்க சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் சிறப்புமிக்க வாகனமாக இதனை ஈவியம் உருவாக்கியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈவியம் நிறுவனம் 72V/42Ah பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 150 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

இதேபோல், மணிக்கு 85 கிமீ வேகத்தில் இயங்கும் திறனை வழங்கக் கூடிய 4000 வாட் மின் மோட்டார் சிஸரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக திருட்டை தவிர்க்கும் கருவி, எல்சிடி திரை, ரீஜெனரேட்டிப் பிரேக்கிங், மொபைல் ஆப் இணைப்பு, ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம், ரியல் டைம் டிராக்கிங், ஓவர் ஸ்பீடு அலர்ட், ஜியோ ஃபென்சிங் போன்ற எக்கசக்க அம்சங்கள் சிஸரில் வழங்கப்பட்டுள்ளன.

15 ஆயிரம் ரூபா வரை விலையை கம்மி பண்ணிய பிரபல நிறுவனம்... இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்!

இந்த அம்சங்களை ஈவியம் நிறுவனம் முன்னதாக பார்த்த காஸ்மோ மற்றும் கோமெட்டிலும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே நிறுவனம் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. இந்த சலுகை நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, October 10, 2022, 19:13 [IST]
English summary
Eveium offers big festive discount on cosmo comet and czar e scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+