இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம்... விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க...

இவிட்ரிக் நிறுவனம் சமீபத்தில் பெருநகர நொய்டா பகுதியில் இன்று துவங்கியுள்ள இவிஇந்தியா எக்ஸ்போவில் தனது 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

புனோவை மையமாக கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம் இவிட்ரிக் மோட்டார்ஸ். இந்நிறுவனம் இன்று பெருநகர நொய்டா பகுதியில் நடந்து வரும் 2022 இவி இந்தியா எக்ஸ்போவில் தனது இரண்டு அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்கூட்டர்கள் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இந்நிறுவனம் இவிட்ரிக் ரைடு எச்எஸ் என்ற ஸ்கூட்டரையும் இவிட்ரிக் மைட்டி ப்ரோ என்ற இரண்டு ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இவிட்ரிக் ரைடு எச்எஸ் ஸ்கூட்டர் அதிக பிரிமியம் தன்மை கொண்ட ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 120 கி.மீ வரை பயணிக்கும். இதுவே மைட்டி ப்ரோ ஸ்கூட்டர் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரும் முழு சார்ஜில் 120 கி.மீ வரையிலான வேகத்தில் பயணிக்கும்.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இந்த இரண்டு ஸ்கூட்டர்களான இவிட்ரிக் ரைடு எச்எஸ் மற்றும் மைட்டி ப்ரோ ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களிலும் 12 இன்ச் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய அம்சமாக இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகள் ஸ்வேப் செய்யக்கூடிய லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் முழுமையாக சார்ஜ் ஏற 1 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் சிவப்பு, வெள்ளை மற்றும் க்ரே நிற ஆப்ஷன்கள் உள்ளன. இது போக இந்த ரைடு எச்எஸ் ஸ்கூட்டரில் கருப்பு பெயிண்ட் ஸ்கீமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இந்த ஸ்கூட்டர்கள் 200 டீலர் ஷிப்கள் மூலம் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி புறநகர், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஓடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விற்பனையாகவுள்ளன. மேலும் இந்தாண்டு இறுதிக்குள் இந்த ஸ்கூட்டர்களை 500 டீலர்ஷிப்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இது குறித்து இவிட்ரிக் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் பட்டேல் கூறும்போது "இந்தியா மெதுவாக எலெக்ட்ரிக் வாகனப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புரட்சிக்கு தீனி போடும் வகையில் நல்ல வாகனங்களைத் தயார் செய்து வழங்கும் நிறுவனம் தான் தற்போதைய தேவை. எங்கள் இவிட்ரிக் நிறுவனம் இது குறித்த ஆழ்ந்த புரிதல் மற்றும் அனுபவத்துடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கான தரமான தயாரிப்புகளைத் தரவுள்ளோம்.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

தற்போது இந்த இவி எக்ஸ்போவில் 2 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இவி எக்ஸ்போ இந்தியா தான் சரியான தளமாக இருக்கும் எனக் கருதி இங்கே அறிமுகம் செய்கிறோம். மேலும் எங்கள் தயாரிப்புகளை மேக் இன் இந்தியா காராகவே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். " இவ்வாறு கூறினார்.

இரண்டு இவிட்ரிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று அறிமுகம் . . . விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க . . .

இவிட்ரிக் நிறுவனம் இந்த இவிட்ரிக் ரைடு எச்எஸ் ஸ்கூட்டரை ரூ81,838 என்ற விலையிலும், மைட்டி ப்ரோ என்ற ஸ்கூட்டரை ரூ79,567 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது. இவிட்ரிக் நிறுவனம் இந்தியாவின் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. இதன் விலையும் மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஸ்கூட்டருக்காக கொடுக்கப்பட்ட ரேஞ்சும் சிறப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2022, 17:00 [IST]
English summary
Evtric motor launches ride hs and mighty pro electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+