இந்த மாதிரி எல்லாம் வீடியோ போடாதீங்கன்னு சொன்னா கேக்குறாங்களா! வீடியோ வைரலானதால் சிக்கலில் சிக்கிய இளம் பெண்..
இளம் பெண் ஒருவரை காவல்துறையினர் வைரலாகிய வீடியோவைச் சான்றாக வைத்துக் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நமது டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பல்வேறு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, வாகன பிரியர்களுக்கு பயனுள்ள பல்வேறு தகவல்களை வாகன உலகம் சார்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. அந்தவகையில், புதுமுக வாகனங்களின் வெளியீடு, ரைடு ரிவியூ தகவல், விரைவில் அறிமுகமாக இருக்கும் வாகனங்களின் விபரம் என பல்வேறு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுதவிர, வாகனங்களின் ஒப்பீட்டு தகவல், வாகனத்தை எப்படி பராமரிப்பது, எரிபொருள் நிரப்பும்போது ஏமாற்றப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய டிப்ஸ்களையும் நமது தளம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அவ்வப்போது விபத்தைத் தவிர்த்தல் மற்றும் விபத்துகளின்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற அறிவுறுத்தல்களையும் நாம் நம்முடைய தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வரிசையில் தற்போது வாகனங்கள் சார்ந்து நாம் செய்யக்கூடாது ஓர் முக்கிய செயல்குறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாகன ஸ்டண்ட், இது நமக்கு மட்டுமின்றி பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்று. எனவேதான் போக்குவரத்து விதிகள் இதனை மிகக் கடுமையாக எதிர்க்கின்றன. போக்குவரத்து போலீஸார்களும் வாகன ஸ்டண்ட் விஷயத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்தளவு என்றால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு வாகன ஸ்டண்ட் நிகழ்வுகளுக்கு எதிராக அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இத்தகைய ஓர் சம்பவமே உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. வாகன ஸ்டண்டில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு அம்மாநில காவல்துறை ரூ. 11 ஆயிரம் அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர்.
இதுதவிர, காவலர்களிடத்தில் மிக மோசமாக நடந்துக் கொண்ட காரணத்தினால் அந்த இளம்பெண் மீது இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை காசியாபாத் காவல்துறை எடுத்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் யுட்யூபில் மிகவும் ஃபேமஸாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நபர்களில் புல்லட் ராணி என்கிற சிவாங்கி தபாஸும் ஒருவர் ஆவார்.

இவர் ஃபேமஸாவதற்கு புல்லட் பைக்கே காரணம் என கூறலாம். இந்த பைக்கை அவர் இடம் விட்டு இடம் போவதற்கு அதிகம் பயன்படுத்தியிருப்பாரோ இல்லையோ. ஆனால், அதிகம் வாகன ஸ்டண்டிற்காக பயன்படுத்தியிருக்கின்றார். அவ்வாறு அவர் மேற்கொள்ளும் ஸ்டண்ட் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரது ஃபாலோவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்து வந்தார் புல்லட் ராணி.

அந்தவகையில், சமீபத்தில் அவர் புல்லட் பைக்கில் மேற்கொண்ட ஸ்டண்டினாலேயே தற்போது விபரீதத்தில் சிக்கியிருக்கின்றார். இளம்பெண்ணின் செயல் மற்றவர்களையும் செய்ய தூண்டும் வகையில் இருப்பதால், காசியாபாத் காவல் அதிகாரிகள் இளம்பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக சில காவல் பெண் அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அப்போது தன்மீதிருந்த தவற்றை மறந்து இளம்பெண் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, வாகன ஸ்டண்ட் மற்றும் பெண் காவலரிடத்தில் மோசமாக நடந்துக் கொண்டது என இரு காரணங்களை முன் வைத்து புல்லட் ராணியை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இளம்பெண் மீது காவல்துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்கிற முழுமையான விபரம் இதுவரை வெளியாகவில்லை. இதுபோன்ற சிக்கல்களில் சிக்கக் கூடாது என்பதற்காகவே காவல்துறையினரும், சமூக நல ஆர்வலர்களும் வாகன ஸ்டண்ட்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இன்றைய இளைஞர்களோ எதையும் கேட்டுக் கொள்ளாமல் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுமாதிரியான இளைஞர்களுக்கு ஓர் மிக சிறந்த உதாரணமாகவே சிவாங்கி தபாஸ் (புல்லட் ராணி) மாறியிருக்கின்றார்.

வாகன ஸ்டண்ட்டில் ஈடுபடுவது குற்றமில்லாத செயல். ஸ்டண்டிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் டிராக்களில் ஈடுபடும் வரையில் மட்டுமே அது குற்றமற்ற செயலாகும். அதுவே, பொதுவெளியில், அதாவது, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் நிகழ்த்தப்படும் என்றால் அது குற்ற செயல் ஆகும். இது ஸ்டண்டில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமின்றி பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த காரணத்திற்காகவே ஸ்டண்டுகள் கடுமையாக தவிர்க்கக் கூடிய செயல் என கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பகுதிகள் பலவற்றில் ஸ்டண்ட் செய்வதற்கென தனி டிராக்குகள் உள்ளன. இதற்கு பயிற்சியளிப்பதற்காக தனி இன்ஸ்டியூட்களும்கூட நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் ஸ்டண்டின் நுணுக்கங்களை அறிந்துக் கொள்ளவும், பாதுகாப்பாக வாகன ஸ்டண்டை செய்வது எப்படி என்பதையும் கற்று தருவார்கள்.

ஸ்டண்டில் ஈடுபடும்போது ஆபத்து அதிகம் என்பதால் முறையான கவசங்களை ஈடுபடுவது சிறந்தது. ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேன்ட், முழங்கால் குவார்ட், எல்போ குவார்ட் மற்றும் குளோவ்ஸ் ஆகியவற்றை அணிந்து ஸ்டண்டில் ஈடுபட வேண்டும். இது மிகப் பெரிய காயங்களில் இருந்து காப்பாற்ற ஏதுவாக இருக்கும். ஸ்டண்ட் சாகசங்களை செய்யும் முன் அது மிகுந்த ஆபத்தானவை என்பதை உணர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








