ஸ்டைல பாத்தா அப்படி தெரியலையே! லீகலா சாலையில் வைத்து பயன்படுத்த கூடிய பைக்குகளை வெளியீடு செய்த கேஸ்கேஸ்!

கேடிஎம் (KTM) நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ்கேஸ் (GasGas) அதன் முதல் சாலை பயன்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிள்களை உருவாக்கியிருக்கின்றது. இதனையே தற்போது நிறுவனம் வெளியீடும் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வரும் முன்னணி நிறுவனங்களில் கேடிஎம் (KTM)-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. நிறுவனத்தின் ஒவ்வொரு பைக் மாடலும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை போன்று சீறி பாயும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இதுமட்டுமின்றி அதிக பிரீமியம் தோற்றத்தைக் கொண்டவையாகவும் அவை காட்சியளிக்கின்றன. எனவேதான் இளைஞர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூப்பரான நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ்கேஸ் (GasGas), சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற இருசக்கர வாகனங்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளு. மேலும்,அவற்றை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

நிறுவனம் பல ஆண்டுகளாக இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வந்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவை அனைத்தும் பொதுவான சாலை பயன்பாட்டிற்கு உகந்த வாகனங்கள் அல்ல. இந்த நிலையிலேயே, லீகலாக சாலையில் வைத்து பயன்படுத்தக் கூடிய வசதிக் கொண்ட பைக்குகளை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. கேடிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் தற்போது ஸ்பெயின் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் அதன் புதுமுக இருசக்கர வாகன தயாரிப்புகளான எஸ்எம்700 (SM 700) மற்றும் இஎஸ் 700 (ES 700) ஆகிய பைக் மாடல்களை வெளியீடு செய்திருக்கின்றது.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

கேடிஎம் நிறுவனத்தின்கீழ் இயங்க தொடங்கிய பின்னர் உருவாக்கப்படும் முதல் தயாரிப்புகள் இதுவாகும். ஆகையால், இந்த தயாரிப்புகள் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. இரண்டும் மிடில் வெயிட் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களாகும்.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இரு பைக் மாடல்களையும் கேடிஎம் நிறுவனம் அதன் 690 பைக் மாடல்களை தயாரித்து வரும் அதே பிளாட்பாரத்தில் வைத்தே தயாரித்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்திலேயே ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் 701 ட்வின் பைக்குகளும் தயாரிக்கப்படுகின்றன.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

ஆகையால், இவ்விரு பைக் மாடல்களைப் போலவே மிக சிறப்பான தயாரிப்புகளாக எஸ்எம் 700 மற்றும் இஎஸ்700 ஆகியவை காட்சியளிக்கின்றன. இரு பைக் மாடல்களிலும் 692.7 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய லிக்யூடு-கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 73.7 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனை வைத்து பார்க்கையில் வெளிநாடுகளில் ஏ2 லைசென்ஸை வைத்திருப்போர்களுக்கு மிக சிறந்த பைக்காக இது இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

எரிபொருள் நிரப்பப்படாமல் எஸ்எம் 700 பைக்கின் எடை 148.5 கிலோகிராமாகவும், இஎஸ் 700 மாடலின் எடை 147.5 கிலேவாகவும் உள்ளது. எவராலும் எளிதில் கையாளக் கூடிய எடையில் இது இருக்கின்றது. இரு பைக்குகளில் எஸ்எம் மாடல் சாலை பயன்பாட்டிற்கு உகந்ததாகவும், இஎஸ் ட்ரிம் அட்வென்சர் (சாகச) பயணங்களுக்கு ஏற்றதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இஎஸ் ட்ரிம் அட்வென்சர் பயணத்தை மிக சிறப்பாக மேற்கொள்வதற்காக அதற்கேற்க டயர், ரைடிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், சாலை பயன்பாட்டில் சிறந்த விளங்க வேண்டும் என்பதற்காக எஸ்எம் தேர்விலும் கணிசமான சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இதுதவிர, டிராக்சன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், அப்-டவுண் குயிக் ஷிஃப்டர் மற்றும் இரு விதமான ரைடிங் மோட் உள்ளிட்டவையும் இப்பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தின் தோற்றத்தைப் பொருத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தால் பைக் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, மட்குவார்ட், சஸ்பென்ஷன், இருக்கை, ஹெட்லேம்ப், இருக்கை மற்றும் ஃப்ரேம் உள்ளிட்டவற்றிற்கு சிவப்பு நிறமே கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், கேஸ்கேஸ் எனப்படும் பெரிய எழுத்துகள் கொண்ட பிராண்ட் பெயரும் பைக்குகளில் ஒரே மாதிரியானதாக இடம் பெற்றிருக்கின்றன.

கேடிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான கேஸ்கேஸ் உருவாக்கிய மோட்டார்சைக்கிள்! இதுதான் நிறுவனம் தயாரித்த முதல் பைக்!

இவற்றில் ஒரே மாதிரியானதாக இரு மாடல்களும் தென்பட்டாலும் வீல் மற்றும் டயர் விஷயத்தில் இரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. இஎஸ் 700 ட்ரிம்மில் அட்வென்சர் பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர் மற்றும் ஸ்போக் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாலை பயன்பாட்டிற்கு ஏதுவாக உருவாகியிருக்கும் எஸ்எம் 700 தேர்வில் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளும் மிக விரைவில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெளியீட்டை தொடர்ந்து விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் கேஸ்கேஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆனால், இந்திய சந்தையில் இப்பைக் விற்பனைக்கு வருமா என்பது கேள்விக்குறியே. இதுகுறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 28, 2022, 8:30 [IST]
English summary
Gasgas reveals first production motorcycles sm 700 and es 700
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+