எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் வருகிறது க்ரெட்டா இ-ஸ்கூட்டர்

க்ரெட்டா (Greta) நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டர் ஒன்றை வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் அப்பெயரிடப்படாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

க்ரெட்டா (Greta) நிறுவனம் மிக விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

நிறுவனம் ஏற்கனவே அதன் பிராண்டின்கீழ் நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் வரிசையிலேயே ஓர் புதிய தேர்வை இணைக்கும் முயற்சியில் தற்போது க்ரெட்டா நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. டீசர் வீடியோவில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முகப்பு பகுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

அத்துடன், அந்த வாகனத்தில் இடம் பெற இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் படம், என்ன ஸ்டைலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது போன்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. இதை வைத்து பார்க்கையில், பெயரிடப்படாத அந்த வாகனம் மிகவும் அட்டகாசமான ஓர் தயாரிப்பாக இந்திய சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

அனைத்தும் வீடியோ வாயிலாகவே தெரிய வந்துள்ளது. சென்ற மாதம் க்ரெட்டா நிறுவனம் க்ளைட் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் காணப்படும் அதற்கு ரூ. 80 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

இந்த சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் போதும். இத்துடன், கூடுதல் சிறப்பு வசதிகளாக 3.5 இன்ச் அளவுள்ள அகலமான ட்யூப் லெஸ் டயர், அதிக இருக்கமான பயணங்களுக்கு உதவும் வகையிலும், கன்வென்ஷனல் மற்றும் ஹைட்ராலிக் செல் ஷாக்கர் சஸ்பென்ஷன் செட்-அப்பும் க்ரெட்டா க்ளைடில் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

இத்துடன், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இவை மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும். இதுமட்டுமின்றி, அதிகப்படியான நிற தேர்வை வழங்கும் வகையில் ஒட்டுமொத்தமாக 7 விதமான கலர் ஆப்ஷன்கள் க்ரெட்டா க்ளைடிற்கு வழங்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

மஞ்சள், கிரே, ஆரஞ்சு, ஸ்கார்லட் சிவப்பு, ரோஸ் கோல்டு, கேண்டீ வெள்ளை மற்றும் ஜிட் பிளாக் உள்ளிட்ட நிறங்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதுபோன்ற அதிக சிறப்பான வசதிகளுடனேயே க்ரெட்டா க்ளைட் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுபோன்ற பன்முக வசதிகளுடனேயே விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதுமுக ஸ்கூட்டரும் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

தற்போது க்ரெட்டா நிறுவனத்தின்கீழ் க்ளைட் மட்டுமின்றி, ஹார்பர், இவெஸ்பா மற்றும் ஹார்பர் இசட்எக்ஸ் உள்ளிட்ட மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவை ரூ. 60 ஆயிரம் தொடங்கி ரூ. 92 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க... புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது க்ரெட்டா!

சமீப சில காலமாக இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கி வருகின்றன. ஆகையால், மின்சார வாகனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், அந்த வாகனங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை சில முன்னணி நிறுவனங்கள் ஆன்டி ஃபையர் திறன் கொண்ட பேட்டரியை தங்களின் வாகனங்களில் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. இதேமாதிரியான ஓர் முயற்சியை க்ரெட்டா நிறுவனமும் மிக விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி பெரும் உதவியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 12, 2022, 16:23 [IST]
English summary
Greta reveals new teaser video for electric scooter ahead of launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+