ரூ.50,000க்கும் கம்மியான விலை! எளிய மக்களின் மின் வாகன தாகத்தை தீர்க்க வந்திருக்கும் ஜிடி சோல் இ-ஸ்கூட்டர்கள்!
ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஜிடி ஃபோர்ஸ் (GT Force) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு சூப்பரான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் முன்னணி நிறுவனங்களும், புதுமுக நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் இருசக்கர மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், புதுமுக மின் வாகன உற்பத்தியாளர் ஒருவர் இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் இரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றார். ஜிடி ஃபோர்ஸ் எனும் புதுமுக நிறுவனமே இந்திய சந்தையில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் நிறுவனம் ஆகும்.

அது அறிமுகம் செய்திருக்கும் இரண்டும் குறைந்த வேக இயக்கம் திறன் மின்சார ஸ்கூட்டர்கள் ஆகும். ஜிடி சோல் (GT Soul) மற்றும் ஜிடி ஒன் (GT One) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். ஆமாங்க, மிக மிக குறைவான விலையிலேயே இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அறிமுக விலையாக ஜிடி சோல் மாடலுக்கு ரூ. 49,996-ம், ஜிடி ஒன் மாடலுக்கு ரூ. 59,800-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த குறைவான விலையிலேயே இந்திய மின் வாகன சந்தையைக் கலக்க இரு மின்சார ஸ்கூட்டர்களும் வருகை தந்துள்ளது. இரண்டும் விலை குறைவானதாக இருந்தாலும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டவையாக உள்ளன.

ஜிடி சோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரம்:
இது ஓர் குறைந்த வேக இயக்கம் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இந்த இருசக்கர வாகனம் லித்தியம் மற்றும் லீட் என இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, 48V 28Ah திறன் கொண்ட லீட் பேட்டரி தேர்விலும், 48V 24Ah திறன் கொண்ட லித்தியம் பேட்டரி தேர்விலும்தான் ஜிடி சோல் விற்பனைக்குக் கிடைக்கும்.

இவையிரண்டில் லித்தியம் அயன் பேட்டரி தேர்வு சற்று அதிக ரேஞ்ஜ் தரும். அது ஓர் முழு சார்ஜில் 60 கிமீ முதல் 65 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். அதேவேலையில், லீட் பேட்டரி தேர்வை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக 50 கிமீ முதல் 60 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த இரு பேட்டரி தேர்வுகளிலும் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதுவே மணிக்கு 25 கிமீ வேகத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயங்கச் செய்கின்றது. ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ட்யூப்லர் ஃப்ரேமைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. இது இ-ஸ்கூட்டரின் அதிக உறுதித் தன்மைக் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 95 கிலோவாகும். இதில், 130 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்.

இந்திய சாலைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதனை ஜிடி ஃபோர்ஸ் வடிவமைத்திருக்கின்றது. இருசக்கர வாகனத்தில் சிறப்பு வசதிகளாக சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்டி தெஃப்ட் அலாரம், பார்க்கிங் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஜிடி சோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பன்முக நிற தேர்வுகளிலும் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், சிவப்பு (Red), கருப்பு (Black), வெள்ளை (White) மற்றும் சில்வர் (Silver) ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

ஜிடி ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரம்:
ஜிடி ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஓர் லோ ஸ்பீடு மின்சார வாகனமாகும். இது மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதிலும் இரு விதமான பேட்டரி தேர்வுகளை ஜிடி ஃபோர்ஸ் வழங்குகின்றது. 48V 24Ah லீட் பேட்டரி தேர்வும், 48V 28Ah லித்தியம் பேட்டரி தேர்வுமே ஜிடி ஒன்னில் வழங்கப்படுகின்றது.

இவையிரண்டும் ஜிடி சோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே ரேஞ்ஜ் தரக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, லீட் பேட்டரி தேர்வு ஓர் முழு சார்ஜில் 50-60 கிமீட்டரும், லித்தியம் அயன் பேட்டரி தேர்வு 60-65 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இதன் லோடி திறன் 140 கிலோவாகும்.
மேட் சிவப்பு (Matt Red) கருப்பு (Black), வெள்ளை (White), சில்வர் (Silver) ஆகிய நிற தேர்வுகளில் ஜிடி ஒன் விற்பனைக்குக்கிடைக்கும். இதில் கூடுதல் சிறப்பு வசதிகளாக திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், பார்க்கிங் மோட், ரிவர்ஸ் மோட், மொபைல் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூப்பரான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனை இயக்க லைசென்ஸ் தேவைப்படாது என கூறப்பட்டுள்ளது. இரண்டும் மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கக் கூடியவை என்பதால் ஆர்சி போன்ற முக்கிய ஆவணங்களும் தேவைப்பாடாது.

தற்போது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது. ஜிடி ஃபோர்ஸ் 80க்கும் மேற்பட்ட நகரங்களில் 100க்கும் அதிகமான விற்பனையகங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், உபி, உத்தர்காண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலேயே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








