121 பிஎச்பி பவர் கொண்ட 2022 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் வெளியீடு... ரொம்ப பவர்ஃபுல்லான பைக்!
கேடிஎம் நிறுவனம் அதன் 889 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் கொண்ட 890 ட்யூக் ஆர் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இந்தப் பைக் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவர் மற்றும் 99 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். இதுகுறித்த கூடுதல் முக்கிய தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் அதன் 2022, 890 ட்யூக் ஆர் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மிடில் வெயிட் நேக்கட் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். மேலும், அதிக பவர்ஃபுல்லான பைக்காகவும் இது காட்சியளிக்கின்றது.

இந்த பைக்கை புதியதாக அட்லாண்டிக் ப்ளூ நிற ஸ்கீமில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதே நிற தேர்விலேயே கேடிஎம் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய நிற தேர்வை தவிர வேறு எந்த மாற்றத்தையும் 2022 வெர்ஷன் 890 ட்யூக் ஆர் பைக்கில் கேடிஎம் செய்யவில்லை.

ஆம், இதை மட்டுமே புதிய மாற்றமாகச் செய்து 2022 கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பைக்கில் 889 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

6 ஸ்பீடு வசதிக் கொண்ட ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி உடைய கியர்பாக்ஸே இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 890 ட்யூக் ஆர் பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய நிற தேர்வானது ஆர்சி16 ஜிபி ரேஸர் பைக்கிலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முழு அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட டபிள்யூபி அபெக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, கேடிஎம் 890 ட்யூக் ஆர்பைக்கில் ஏபிஎஸ் மற்றும் கார்னரிங் எம்டிசி (Motorcycle Traction Control) உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

6 ஆக்சிஸ் லீன் ஆங்கிள் சென்சார், நான்கு விதமான மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரீட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய ரைடிங் மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ஆண்டி வீலி சிஸ்டம் போன்ற கூடுதல் சிறப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாகவே இந்தப் பைக் 166 கிலோ எடையைக் கொண்டிருக்கின்றது. எஞ்ஜின் திறனைப் பைக்கின் எடை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதித்து விடக் கூடாது என்பதற்காக இத்தகைய குறைவான எடையில் பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், அனைத்து சாலைகளிலும் சிறந்த செயல்படும் வகையில் 206 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, பைக்கில் பிரீமியம் அம்சங்களாக அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம், வித்தியாசமான கண்ணாடிகள், மோட்டார்சைக்கில் ஸ்டாண்டு மற்றும் எஞ்ஜின் - சேஸிஸ்களில் அனோடைஸ்டு பாகங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ட்வின் 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமி டிஸ்க் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, முன் பக்க டிஸ்க்குடன் சேர்த்து 4 பிஸ்டன் காலிபரும், பின் பக்க டிஸ்குடன் சேர்த்து ஒற்றை பிஸ்டனும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவை அனைத்தும் பாதுகாப்பான பயணத்திற்கு துணையாக இருக்கும். இது போன்று சிறப்பு வசதிகள் கொண்ட இன்னும் பல பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவற்றில் சில நடப்பு மாதத்தின் இறுதிக்குள் அறிமுகமாக இருக்கின்றன. கேடிஎம் நிறுவனம் 890 ட்யூக் ஆர் பைக்கை முதன் முதலில் 2020ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்தப் பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதே வரவேற்பை புதிய நிறத்தை அப்டேட்டாகப் பெற்று வந்திருக்கும் 890 ட்யூக் ஆர் பைக்கிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








