மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம்... எப்படி செயல்படுது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க!

நீங்க எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஷோரூம் போயிருந்தா நிச்சயம் 'ஃபேம்-2' (FAME-II) என்ற வார்த்தை உங்கள் காதில் வந்து விழுந்திருக்கும். மத்திய அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியதே இத்திட்டம். இதன் வாயிலாக மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

உயரிய அளவில் காணப்படும் மின் வாகனத்தின் விலையை பெருமளவில் குறைப்பதே இத்-திட்டத்தின் முக்கிய பணியாகும். இதுமட்டுமின்றி இந்தியாவில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கவும் இத்திட்டம் உதவுகின்றது. இந்த சிறப்பு திட்டம் நாட்டில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைத்து, சுற்று சூழலுக்கு நண்பனாக விளங்கும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே ஃபேம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் முதல் முறையாக 2019ம் ஆண்டிலேயே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

ஆனால், இந்த திட்டம், மின் வாகனங்களும் சென்ற ஆண்டே மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியது. இதன் விளைவு தற்போது நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பன் மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. மேலும், எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் சூடுபிடித்துக் காணப்படுகின்றது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

முன்னதாக ஃபேம்-2 திட்டத்தின் வாயிலாக ஒரு கிலோவாட் (kWh) பேட்டரிக்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதனால் இந்த மானிய தொகையை ரூ. 15 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியிருக்கின்றது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

இதனால், மின்சார வாகனத்தின் விலை முன்பைக் காட்டிலும் பல மடங்கு தற்போது குறைந்திருக்கின்றது. உதாரணமாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் எனில், மேலும், அதன் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் எனில், ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் ரூ. 15 ஆயிரம் வீதம் மானியம் என வழங்கப்படும்.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

இதன் விளைவாக ரூ. 45 ஆயிரம் வரை விலை குறையும். இந்த நிலை ஒரு லட்ச ரூபாய் என்ற விலையை 55 ஆயிரத்திற்கு குறைக்கும். இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களையும் மின் வாகனத்தை நுகர உதவும். இந்த காணரத்திற்காகவே மத்திய அரசு ஃபேம்-2 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டம் மட்டுமின்றி சில மாநில அரசுகளும் தங்களின் பங்காக மானிய திட்டத்தை தங்களின் மாநில மக்களுக்காக வழங்கி வருகின்றன. இதன் விளைவாக இன்னும் பல மடங்கு விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. குஜராத், டில்லி போன்ற மாநில அரசுகள் சில இதுபோன்று மானிய திட்டங்களை அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் மானியம் மட்டுமின்றி வரி சலுகை மற்றும் பதிவு கட்டண சலுகை உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றது. இது மக்களை கூடுதலாக மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபத்தைக் கொடுக்கக் கூடியவையாக காட்சியளிக்கின்றன.

மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம் எப்படி செயல்படுகிறது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க! ரொம்ப யூஸாகும்!

தற்போது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் நாட்டில் மிக உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவை ரூ. 100ஐக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகவும் (எரிபொருள் விலை பாரத்தைக் குறைக்கும் பொருட்டு) மக்கள் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Here is full details about how and what is fame 2 scheme
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X