நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. குறிப்பாக, மலிவு விலை எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகிறது. இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் மின்சார இருசக்கர வாகனங்களை அதிகளவில் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

அந்தவகையில், நாட்டில் எந்தெந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 62,499 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் ஐந்தின் பட்டியலையே இந்த பட்டியலில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலை விரிவான தகவலைப் பார்க்கலாம்.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

அவோன் இ ஸ்கூட் (Avon E Scoot)

விலை - ரூ. 45,000

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு மின்சார ஸ்கூட்டர்கள் அவோன் இ ஸ்கூட்-வும் ஒன்று. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாட்டில் ரூ. 45 ஆயிரம் என்ற மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 215 வாட் பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 48 V/20 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இப்பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணி நேரம் தேவைப்படுகின்றது. இவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை அவோன் இ ஸ்கூட் பயனர்களால் பயணிக்க முடியும். அதேநேரத்தில் இந்த வாகனம் உச்சபட்சமாக மணிக்கு 24 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இந்த குறைந்த பட்ச வேக திறனை அவோன் இ ஸ்கூட் கொண்டிருப்பதால் இதனை இயக்க லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் தேவைப்படாது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1)

விலை: ரூ. 45,099

அவோன் இ ஸ்கூட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக குறைந்த விலையில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டராக பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 இருக்கின்றது. இதன் விலை ரூ. 45,099 மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

அதேநேரத்தில் பேட்டரிகள் இல்லாத நிலையிலேயே இந்த குறைவான விலையில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விலைக்கு வாங்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பேட்டரியுடன் இதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாட்டில் ரூ. 68,999 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இ-ஸ்கூட்டரில் 1500 W BLDC மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இத்துடன், 48 V/39 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். பேட்டரி இல்லாமல் வாங்கப்படும் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகள் 'பேட்டரி ஸ்வாப்' மையங்கள் வாயிலாக வாடகைக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் (Hero Electric Flash)

விலை: ரூ. 46,640

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கியமான மின்சார இருசக்கர வாகனங்களில் ஒன்றே இந்த ஃப்ளாஷ். இது ரூ. 46,640 தொடங்கி ரூ. 59,640 வரையிலான விலையில் விற்பனைக் கிடைத்து வருகின்றது. இரு விதமான வேரியண்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். எல்எக்ஸ் விஆர்எல்ஏ மற்றும் எல்எக்ஸ் இவ்விரு வேரியண்டுகளிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் உச்சபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மின்சார ஸ்கூட்டரில் 250 வாட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 51.2V,30 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ என்பதால் இதனை இயக்கவும் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என கூறப்படுகின்றது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

அவன் ட்ரெண்ட் இ (Avan Trend E)

விலை: ரூ. 56,900

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டரை போலவே அவன் ட்ரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நாட்டில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிங்கிள் பேட்டரி பேக் மற்றும் இரட்டை பேட்டரி பேக் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

இதன் சிங்கிள் பேட்டரி பேக் வேரியண்ட் 60 கிமீ எனும் அதிகபட்ச ரேஞ்ஜையும், இரட்டை பேட்டரி பேக் தேர்வு 110 கிமீ ரேஞ்ஜ் திறனையும் வழங்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ ஆகும். இந்த சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 800 W BLDC மோட்டார் அவன் ட்ரெண்ட் இ ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஈவீ ஆஹவா (EeVe Ahava)

விலை ரூ. 62,499

நம்முடைய இந்த விலைக் குறைவான மின்சார இருசக்கர வாகனங்களின் பட்டியலிலேயே அதிக விலைக் கொண்ட இ-வாகனமாக ஈவீ ஆஹவா காட்சியளிக்கின்றது. இந்தியாவில் 62,499 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

அதிக விலைக்கேற்ப அதிக சிறப்பம்சங்கள் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றது. ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு, எல்இடி இலுமினேஷன், ஜியோ டேக்கிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பாட்டில் கேஷ், ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்ம இந்தியாவுல இவ்ளோ கம்மியான விலையில மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்குதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஈவீ ஆஹவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60 V/27 பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 முதல் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இருசக்கர வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு முதல் 7 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 14:07 [IST]
English summary
Here is list of india s most affordable e scooters avon e scoot to eeve ahava
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+