இப்போதும் உற்பத்தியில் இருக்கும் உலகின் தலைசிறந்த பவர்ஃபுல் சூப்பர்பைக்குகள்! அனைத்தும் சாலையில் ஓட்ட லீகலானவை
உலகின் தலைசிறந்த அதிக பவரை வெளியேற்றக் கூடிய பைக்குகளின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்னதான் விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும், ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, சூப்பர் இருசக்கர வாகனத்தில் லாங் டிரைவ் செல்வது பலரின் விருப்பமாக உள்ளது. மனசு கஷ்டம், வெறுமையான வாழ்க்கை ஆகியவற்றை மழுங்கடிக்கக்கூட ஒரு சிலர் பைக் ரைடையே தேர்வு செய்கின்றனர். தற்போது நடிகர் அஜித்கூட அப்படிதான் ஓர் ரைடை தொடங்கியிருக்கின்றார்.

அனைத்திலிருந்தும் விடுமுறையை பெறும் விதமாக அவர் தற்போது பைக் ரைடை உலகம் முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு ஜாலி ரைடு செல்ல உகந்த ஐந்து சூப்பர் பைக்குகளின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த சூப்பர் அனைத்தும் இப்போதும் தயாரிப்பில் இருக்கக் கூடிய சாலையில் ஓட்ட லீகலான பவர்ஃபுல் பைக்குகள் ஆகும். சரி வாங்க பைக்குகளின் லிஸ்டை பார்க்க போகலாம்.

டுகாட்டி பனிகேல் வி4 ஆர் (Ducati Panigale V4 R)
டுகாட்டி பனிகேல் வி4 ஆர், இந்த பைக்கே நாம் பார்க்கும் இந்த பட்டியலில் மிக அதிக பவரை வெளியேற்றக் கூடிய மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக் உச்சபட்சமாக 215.02 பிஎச்பி பவரை வெளியேற்றும். இந்த சூப்பரான பவரை வெளியேற்றுவதற்காக இப்பைக்கில் நிறுவனம் 998 சிசி வி4 மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது.

இது, 112 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் அக்ரபோவிக் ரேஸ் எக்சாஸ்ட் பொருத்தும்பட்சத்தில் 237.2 பிஎச்பி பவரை வெளியேற்றும். இந்த முரட்டுத் தனமான பவரை இப்பைக் வெளியேற்றினாலும், சாலையில் பயன்படுத்த உகந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது.

ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபையர்பிளேட் எஸ்பி (Honda CBR1000RR Fireblade SP)
ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஹோண்டா நிறுவனத்தின் மோஸ்ட் பவர்ஃபுல் மோட்டார் கொண்ட பைக்காக காட்சியளிக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் 214.5 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். இந்த சூப்பரான திறன் வெளியேற்றத்திற்காக 999.9 சிசி, இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 214.5 பிஎச்பி பவருடன் சேர்த்து 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மாதிரியான சூப்பரான திறனை இப்பைக் வெளியேற்றினாலும் அதன் இயக்கம் ஸ்மூத்தானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஃபேக்டரி (Aprilia RSV4 Factory)
214.03 பிஎச்பி பவர் வெளியேற்றும் திறனுடன் இந்த பட்டியலில் அப்ரில்லா ஆர்எஸ்வி4 மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த பைக்கில் அப்ரில்லா நிறுவனம் 1,099 சிசி திறனை வெளியேற்றக் கூடிய வி4 மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 125 என்எம் டார்க் வரையில் வெளியேற்றும். இந்தியாவின் புல்லட் பைக்குகளைபோல் இதன் சத்தமும் பலரால் விரும்பக் கூடியதாக இருக்கின்றது.

டுகாட்டி பனிகேல் வி4 (Ducati Panigale V4)
இந்த பட்டியலில் நான்காவது இடத்தையும் டுகாட்டி பனிகேல் வி4 பிடித்திருக்கின்றது. வி4 எஞ்ஜின் இந்த பைக்கில் பயன்படுத்தியிருக்கின்ற காரணத்தினாலேயே இப்பைக்கின் பெயரில் வி4 என சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 1,103 சிசி திறனை வெளியேற்றக் கூடியது. இது அதிகபட்சமாக 212.6 பிஎச்பி பவரையும், 123.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் (BMW M 1000 RR)
உலக அளவில் சூப்பர் பைக் தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர்-ம் ஒன்று. இந்த பைக்கை மிக சமீபத்திலேயே பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 999 சிசி இன்லைன்-4 சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 209.1 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடை 193 கிலோவாகும். இந்த சூப்பர் எடை மற்றும் திறன் வெளியேற்றத்தின் காரணத்தினாலேயே இந்த பைக் நம்முடைய இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்க காரணமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








