ப்ரோ கொஞ்சம் நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க... சூப்பரான 5 பைக் இந்த செப்டம்பரில் அறிமுகமாகபோகுதாம்!
சூப்பரான ஐந்து புதுமுக பைக்குகள் இந்த மாசம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் சில முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் விரைவில் புதுமுக இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றனர். அந்தவகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 5 புதிய டூ-வீலர்கள் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளன. இவைகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் பல்சர் என்150 (Bajaj Pulsar N150)
பஜாஜ் நிறுவனம் தற்போது அதன் தயாரிப்புகள் சிலவற்றை அப்டேட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இத்துடன் சில புதிய தயாரிப்புகளையும் பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் பல்சர் என்150 பைக்கை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த இருசக்கர வாகனம் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் புதிய பல்சர் என்150 பைக்கை இந்திய சாலைகளில் சோதனைக்கு உட்படுத்த தொடங்கிவிட்டது. இதனைத்தொடர்ந்து, நிறுவனம் தற்போது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.

ஹீரோ 125 சிசி ஸ்கூட்டர் (Hero 125cc Scooter)
தற்போது இந்திய சந்தையில் 125 சிசி இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்த பிரிவை அதகளப்படுத்தும் விதமாக நிறுவனம் ஹீரோ 125சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனம் தற்போது விற்பனையில் இருக்கும் என்டார்க் 125-க்கு போட்டியாக விற்பனைக்கு வர உள்ளது.

இந்த இருசக்கர வாகனம் ரூ. 85 ஆயிரம் தொடங்கி ரூ. 90 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலையில் மாற்றம் இருக்கலாம். நிறுவனம் விலைகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதேபோல் இருசக்கர வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய விபரமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தின்போது இதுகுறித்த அனைத்து விபரங்களும் வெளியாக உள்ளன.

அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77)
அல்ட்ராவைலட் எஃப்77 இது ஓர் எலெக்ட்ரிக் பைக்காகும். இந்த பைக்கை தயாரிப்பு நிறுவனம் இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் எலெக்ட்ரிக் பைக்காகும். இந்த எலெக்ட்ரிக் பைக் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இது ஓர் 250சிசி எலெக்ட்ரிக் பைக்காகும். இந்த பைக்கின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக வெகு விரைவில் டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட இருக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி 4வி (Hero XPulse 200T 4V)
ஹீரோ எக்ஸ்பல்ஸ் இந்தியாவின் மலிவு விலை அட்வென்சர் பைக்காகும். இந்த இருசக்கர வாகனத்தை அப்டேட் செய்து விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஹீரோ மோட்டோகார்ப். 4வி என்பது அதிக பெர்ஃபார்மன்ஸ் பைக் என்பதைக் குறிக்கும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி, தோற்றத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரெட்ரோ லுக்கை கூடுதலாக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய கவாஸாகி பைக் (New Kawasaki Bike)
கவாஸாகி நிறுவனம் வரும் 25 ஆம் தேதி அதன் புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் முக்கிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் பேபி ரெட்ரோ பைக்காக உருவாக்கியிருக்கின்றது. புல்லட் 350 பைக் மற்றும் பிற 350 சிசி இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக இதன் வருகை அமைய இருக்கின்றது.

கடந்த ஆண்டின் மையப்பகுதியில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கை இந்திய சாலையில் வைத்து சோதனையோட்டம் செய்தது. இந்த பைக்கையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








