டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி? ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் பண்ணாதீங்க!

டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனிலேயே மாற்றுவது எப்படி, இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

முந்தைய காலகட்டத்தில் கடினமானதாக கருதப்பட்ட ஆர்டிஓ செயல்பாடுகள் பல தற்போது மிக எளிமையானதாக மாறிவிட்டன. குறிப்பாக, கொரோனா வைரஸ் கற்பித்த பாடம், பல விஷயங்களை ஆன்-லைனிலேயே செய்துகொள்ள வழிவகுத்துள்ளது. ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல், டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளை வீட்டிலேயே இருந்தபடி ஆன்லைனில் செய்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

தினந்தோறும் ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஆன்-லைன் ஆர்டிஓ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் டூ-வீலரின் உரிமத்தை மாற்றுவது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, வீட்டிலேயே இருந்தபடி டூ-வீலரின் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றிக் கொள்வது எப்படி என்கிற தகவலையே இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

ஓனர்ஷிப்பை மாற்றுவதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்:

  • பதிவுச் சான்றிதழ் - வாகனத்தின் ஒரிஜினல் ஆர்சி சான்று (தற்போது இது ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படுகின்றது).
  • முகவரி சான்று - நிரந்தர முகவரிக்கான சான்றுகள் இருத்தல் வேண்டும். அது மின்சார இணைப்பு பில், கேஸ் பில் அல்லது வீட்டின் அக்ரிமெண்ட் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • காப்பீட்டு நகல் - இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் எந்தவொரு வாகனமும் கட்டாயம் இன்சூரன்ஸைக் கொண்டிருக்க வேண்டும். அந்தவகையில், வாகனத்தின் உரிமத்தை மாற்றும்போதும் இந்த ஆவணம் இருத்தல் அவசியம் ஆகும்.
  • டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!
    • பேன் கார்டு - ஆன்லைனில் இருசக்கர வாகனத்தின் உரிமத்தை மாற்றும்போது உங்களுக்கு விற்பனை செய்த மற்றும் உங்களுடைய பேன் இரண்டும் அவசியம் ஆகும்.
    • பியூசி சான்று - வாகனத்தின் இருப்பை அதிகாரப்பூர்வமானதாக மாற்ற இந்த ஆவணம் கட்டாயம்.
    • படிவம் 28 - இந்த படிவத்துடன் சேர்த்து தடையில்லா சான்று இருத்தல் அவசியமாக உள்ளது. உள்ளூர் ஆர்டிஓ-விடம் இருந்து தடையில்லா சான்றை பெற்றுக் கொள்ள முடியும். இரு வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே உரிம பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது மட்டுமே இந்த ஃபார்ம் 28 அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
    • டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!
      • படிவம் 29 - மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு படிவம் இதுவாகும்.
      • படிவம் 30 - மோட்டார் வாகனத்தின் உரிமையை அறிவிக்கவும், மாற்றவும் இது கட்டாயம்.
      • படிவம் 31 - வாகனத்தை வாங்கியவரின் பெயருக்கு உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்.
      • படிவம் 35 - வாடகை, குத்தகை, கடன் உள்ளிட்டவை முடிவடைந்ததற்கான அறிவிப்பு படிவம் இதுவாகும். வங்கி அல்லது பிற நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறப்பட்டு வாங்கப்பட்டிருக்கும் என்றாலே இந்த படிவம் அவசியம் ஆனது.
      • டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        மேலே உள்ள அனைத்து ஆவணங்களும் தயார் என்றால் அடுத்து நாம் செய்ய வேண்டியது, அரசு உருவாக்கியிருக்கும் வாகனங்களுக்கான பிரத்யேக தளமான பாரிவாஹனுக்குள் நுழைய வேண்டும். அந்த தளத்தில் 'ஆன்லைன் சர்வீசஸ்' என மேலே உள்ள மெனு பாரில் தனி பட்டன் வழங்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்வதன் வாயிலாக சில சேவைகளுக்கான பட்டன் கீழே வரும்.

        டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        அதில், 'வெயிக்கிள் ரிலேட்டட் சர்வீசஸ்' தேர்வு செய்து உள் நுழைய வேண்டும். அதற்கு பின்னர், மாநிலம், ஆர்டிஓ போன்ற விபரங்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். நம்முடைய எல்லைக்கு உட்பட்ட ஆர்டிஓ எது என்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் இது வேறுபட்டு காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

        டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        ஆமாங்க இப்போதும் ஒரு சில மாநிலங்களில் ஒரு சில முக்கிய காரணங்களுக்காக வாகன ஓனர்ஷிப் மாற்றத்திற்கு ஆர்டிஓ வருவது கட்டாயம் என்கின்றன. ஆனால், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓனர்ஷிப்பை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைனுக்கு மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டார்.

        டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        மேலே கூறியதைப் போல் பாரிவாஹன் தளத்திற்குள் உள்நுழைந்து ஆர்டிஓ அலுவலகம் போன்றவற்றை தேர்வு செய்த பின்னர் டிரான்ஸ்ஃபர் ஆஃப் ஓனர்ஷிப்பிற்குள் நுழைய வேண்டும். இதில் உள் நுழைந்த பின்னரே முக்கியமான வேலைகள் பலவற்றை நாம் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, வாகனத்தின் சேஸிஸ் நம்பரை உள்ளிடுவது மற்றும் செல்போன் எண்ணை உள்ளிடுவது உள்ளிட்ட முக்கிய செயல்களை செய்ய வேண்டும்.

        டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        இதன் பின்னர் செல்போனுக்கு ஓர் குறுஞ்செய்தி வரும். அதை தளத்தில் பதிவு செய்வதன் வாயிலாக அடுத்தகட்டத்திற்கு தளம் நம்மை அழைத்து செல்லும். அங்கு வாகனங்கள் பற்றிய சில முக்கிய தகவல்களையும், சில ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதன் பின்னர் கடைசியாக ஓனர்ஷிப் மாற்றத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

        டூ-வீலர் ஓனர்ஷிப்பை ஆன்-லைனில் மாற்றுவது எப்படி?.. ரொம்ப சுலபம்... இதுக்காகபோய் ஆயிரக் கணக்கான ரூபாவை ப்ரோக்கர்கள் கிட்ட தண்டம் செய்யாதீங்க!

        இவ்வாறு செய்வதன் வாயிலாக சுலபமாக இருசக்கர வாகனத்தின் ஓனர்ஷிப்பை மாற்றிக் கொள்ளும். உங்களுக்கு இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம். ஒரு முறை பாரிவாஹன் தளத்தை விசிட் செய்வதன் வாயிலாக, இந்த செயல் எவ்வளவு சுலபமானது உங்களுக்கு தெரிய வரும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 14, 2022, 8:30 [IST]
English summary
Here is tip to how transfer two wheeler ownership in online
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+