சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்குகின்ற காரணத்திற்காக மட்டுமே இல்லைங்க, மிக மிக அதிக தொழில்நுட்ப வசதிகளுடனும் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்திற்காகவும்தான் மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருள் மோட்டார் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் அதிகளவில் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மின்சார இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகின்றன. திருட்டை தவிர்க்க கூடிய தொழில்நுட்பம், இணைப்பு வசதி, குரல் கட்டளை மற்றும் லைவ் டிராக்கிங் போன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இதுதவிர செல்போன் இணைப்பு வசதிக் கொண்ட பெரிய டிஎஃப்டி திரை போன்ற சிறப்பு வசதிகளுடனும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவேதான் கடந்த சில மாதங்களாக மின்சார டூ-வீலர்களின் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இந்த நிலையிலேயே மின்சார இருசக்கர வாகனங்களை விரும்புபவர்களுக்கு உதவும் விதமாக தற்போது நாட்டில் மிக அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube Electric)

டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட் வெர்ஷனை மிக மிக சமீபத்திலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்டு, எஸ் மற்றும் எஸ்டி என மூன்று விதமான தேர்வுகளில் அது கிடைக்கும். இதில், உயர்நிலை வேரியண்டான எஸ்டி-யின் விலை மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இது உயர்நிலை தேர்வு என்பதால் இந்த வேரியண்டில் மட்டும் 7 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடுதிரை வசதிக் கொண்டதும்கூட. மற்றவற்றில் (ஸ்டாண்டர்டு மற்றும் எஸ்) ஐந்து அங்குல திரையே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன வசதிகளாக ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு, நேவிகேஷன் அசிஸ்டன்ஸ், ஜியோ ஃபென்சிங், ரேஞ்ஜ் இன்டிகேஷன், சார்ஜ் ஸ்டேடஸ், ரைடு ஸ்டேடிஸ்டிக்ஸ் மற்றும் ஓவர் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வழங்கும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் அம்சமும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.14 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X)

இந்தியாவில் மிக அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு 450எக்ஸ் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட டிஎஃப்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை வாயிலாக நேவிகேஷன் டேடா மற்றும் ஓவர் தி அப்டேட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இந்த திரை நேரத்திற்கு பிரைட்னைஸை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இதில் தானாகவே இன்டிகேட்டர்களை கேன்சல் செய்யும் வசதி மற்றும் சைடு ஸ்டாண்டு சென்சார்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு, ஃபைண்ட் மை வெயிக்கிள், செல்போனுக்கு வரும் அழைப்பு ஏற்கும் வசதி, இசை, குரல் கட்டளை, ஒய்-ஃபை இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இத்துடன் மிக முக்கியமான அம்சமாக 4ஜி இணைய வசதி இ-சிம் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதபோன்ற பன்முக சிறப்பு வசதிகளுடனேயே 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1.52 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro):

இந்திய சந்தையில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா எஸ்1 ப்ரோ-வும் ஒன்று. இந்த வாகனத்திலும் 7 அங்குல டிஎஃப்டி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை குரல் கட்டளை, கால் மற்றும் குறுஞ்செய்திகளை கையாளும் வசதி மற்றும் ஜியோ ஃபென்சிங் அலர்ட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இதுமட்டுமின்றி, சாவியில்லாமல் ஸ்கூட்டரை பயன்படுத்தும் வசதி, சைடு ஸ்டாண்டு அலர்ட் மற்றும் பன்முக பயன்பாட்டாளர்களின் புரஃபைலை உருவாக்கும் வசதி ஆகியவையும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வாகனத்தின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்யும் பணியில் ஓலா களமிறங்கியிருக்கின்றது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

மூவ்ஓஎஸ் 2.0 என அழைக்கப்படும் அந்த அப்டேட்டட் சாஃப்ட்வேர் அதிக ரேஞ்ஜ் மற்றும் சிறந்த பயன்பாட்டை வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1,39,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

டார்க் க்ரடோஸ் (Tork Kratos)

அதிகம் சிறப்பம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பட்டியலின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும். இந்த வாகனத்தில் முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மல்டி டிரைவிங் மோட்களுடன் வழங்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

இதுமட்டுமின்றி ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிவர்ஸ் மோட், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு, நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்பம் கொண்ட ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிளில் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, லோவ் பேட்டரி இன்டிகேட்டர், ஹசார்டு லைட்டுகள், கிளாக் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவையும் டார்க் க்ரடோஸில் வழங்கப்பட்டுள்ளன. இது ரூ. 1.22 லட்சம் தொடங்கி ரூ. 1.37 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!.. பிடிக்காததுனு எதுமே இருக்காது!

ஒகினவா ஓகி 90 (Okinawa Okhi90)

மேலே பார்த்த மின்சார ஸ்கூட்டர்களை போலவே இந்த வாகனத்திலும் அதிகளவில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ஸ்கூட்டர் டிராக்கிங் அம்சம், ஆன்டி தெஃப்ட் அலாரம், சாவியே இல்லாமல் ஸ்கூட்டரை ஆன் செய்யும் வசதி மற்றும் பிரத்யேக பார்க்கிங் மோட் ஆகிய சிறப்பு வசதிகள் ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
English summary
Here is top 5 e two wheelers list with best features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X