த்ரோட்டில் செய்யலனா பைக் ஆஃப் ஆகுதா... அப்போ இதுதான் காரணமா இருக்கும்!
இருசக்கர வாகனம் தொடர்ச்சியாக த்ரோட்டிலிலேயே இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறதா?, இந்த பாதிப்பு இருசக்கர வாகனங்களில் ஏற்படுவதற்கான காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சில இருசக்கர வாகனங்கள் த்ரோட்டில் செய்யப்படவில்லை என்றால் ஆஃப் ஆகிவிடும். ஆகையால், தொடர்ச்சியாக த்ரோட்டில் செய்த வண்ணம் இருக்க வேண்டியிருக்கும். இதனால் எரிபொருள்தான் அதிகம் வீணாகும். எரிபொருளை மிச்சப்படுத்தலாம் என நினைத்து த்ரோட்டிலை விட்டுவிட்டால் பைக் ஆஃப் ஆகிவிடும். இவ்வாறு ஆஃபாகும் இருசக்கர வாகனத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்வது என்பது மிக கடினமான செயல் ஆகும்.

எனவேதான் ஒரு சிலர் சிக்னல்களில் நிற்கும்போதும் த்ரோட்டிலை கொடுத்த வண்ணம் இருப்பர். இருசக்கர வாகனங்களில் இந்த பிரச்னை எந்த மாதிரியான காரணங்களினால் வருகின்றது என்பது பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

எஞ்ஜினுக்கு செல்லும் எரிபொருளின் அளவு குறைவதால், எரியூட்டும் சிஸ்டம் சரியாக வேலை செய்யாதது, எஞ்ஜின் சிலிண்டர்கள் தவறாக இயங்குதல் மற்றும் பிளக்கில் ஏற்படும் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த சிக்கல் ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி, காற்று மற்றும் ஃப்யூவல் ஃபில்டர்களில் ஏற்படும் கோளாறுகளும் இந்த சிக்கலை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் லிஸ்ட் இதோ:
அதிகப்படியான காற்று உட்செல்லுதல்:
அதிகப்படியான காற்று உள்நுழைவதாலும் சில நேரங்களில் இந்த பிரச்னை ஏற்படுகின்றது. ஆகையால், பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது த்ரோட்டில் தேவைப்படுகின்றது. இதைத் தவிர்க்க நீங்கள் சோக்கை பயன்படுத்தலாம். சோக்கை பயன்படுத்தும்போது தேவையற்ற காற்று உள்நுழைவது தவிர்க்கப்படும். குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் இதுமாதிரியான பிரச்னைகள் பொதுவானவை ஆகும்.

ஆகையால், இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் சோக்கை பயன்படுத்தி வாகனங்களை ஸ்டார்ட் செய்வது நல்ல பலனை அளிக்கும். அதேநேரத்தில், வெயில் காலத்திலும் இதே பிரச்னை நீடித்தால், எஞ்ஜினில் கோளாறு இருக்கின்றது என அர்த்தம். எனவே, உடனடியாக பைக் மெக்கானிக்கை அணுகுவது மிக சிறந்தது.

கோளாறான காற்று வடிக்கட்டி:
காற்று வடிகட்டியில் சிக்கல் ஏற்படுகின்ற நிலையிலும், இந்த பிரச்னை ஏற்படுகின்றது. தேவையற்ற தூசிகள், அழுக்குகள் நுழைவதை தடுப்பதே ஏர் ஃபில்டரின் முக்கிய பணியாகும். இது கார்புரேட்டர், வால்வுகள் மற்றும் எரிப்பான்களுக்கு செல்லும் காற்றையே வடிக்கட்டுகின்றது. இந்த மாதிரியான பணியை மேற்கொள்கின்ற வேலையில் அதன் வாயிலாக குப்பைகள் மற்றும் அழுக்குகள் செல்லப்படும் எனில் எஞ்ஜினின் இயக்கத்தில் பிரச்னை ஏற்படும். இதை சரி செய்ய உடனடியாக ஃபில்டரை மாற்றுவது சிறந்தது.

அசுத்தமான கார்புரேட்டர்:
தரமற்ற எரிபொருளை பயன்படுத்துவதனால் கார்புரேட்டர்கள் எளிதில் அசுத்தமாகின்றன. குறிப்பாக, கார்பன்கள் கார்புரேட்டர்களில் உட்பக்க சுவர் பகுதிகளில் படர்ந்து காணப்படும். இந்த நிலையும் எஞ்ஜினின் இயக்கத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைகின்றன. இதன் விளைவாக தொடர்ச்சியான த்ரோட்டிலை பைக்குகள் எதிர்பார்க்கும். இந்த நவீன காலத்தில் சில மெக்கானிக்குகள் குறிப்பிட்ட சில எந்திரங்களைக் கொண்டு நிமிடப் பொழுதில் கார்புரேட்டர்களை சுத்தம் செய்து கொடுத்துவிடுகின்றனர். இதற்கு பெரியளவில் செலவும் ஆகுவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

காற்று கசிவு:
காற்று வடிகட்டியை இறுக்குமாக பொருத்தவில்லை என்றாலும் இந்த பிரச்னை ஏற்படுகின்றது. கார்புரேட்டரில் கூடுதலாக காற்று கசிவதற்கு இதுவே காரணம் ஆகும். இது நடக்கும் எனில் காற்று - எரிபொருள் கலவை சரியாக எஞ்ஜினுக்கு சென்றடையாது. இதன் விளைவு எஞ்ஜின் அடிக்கடி செயலற்றுப் போவது, தேவையற்ற கொப்பளிப்பு உணர்வு போன்றவற்றை நாம் சந்திக்க நேரிடும்.

எரிபொருள் கசிவு:
இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக த்ரோட்டிலை நம்பியே இயங்குவதற்கு எரிபொருள் கசிவும் ஓர் காரணமாக இருக்கின்றது. எரிபொருளும், காற்றும் கலக்கும்போது அந்த இடத்தில் தீ பற்றக் கூடிய வாயு உருவாகும். இந்த செயல்பாட்டிலேயே எரிபொருள் கசிவு சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றது.

இதில், சிக்கல் ஏற்படும்போது போதுமான எரிபொருள் மற்றின் காற்றின் கலவை செல்லாததால் எஞ்ஜின் அடைக்க ஆரம்பிக்கும். பழுதான ரப்பர் ஹோஸ்கள், எஞ்ஜின் சீல்களால் இந்த சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. திடீரென பெட்ரோல் வாசம் உங்களுக்கு வருகின்றது என்றால் உங்களது பைக்கில் இந்த பிரச்னை இருக்கின்றது என்பதற்கான அர்த்தம் ஆகும்.

கார்புரேட்டரில் போதுமானதைவிட அதிக எரிபொருள் நிரம்புவதானாலும் இந்த சிக்கல் ஏற்படும்:
கார்புரேட்டரில் ஃப்ளோட் பவுல் அல்லது சேம்பர் ஒன்று இருக்கும். இது சரியாக வேலையாக செய்யாதபட்சத்தில் எரிபொருள் கார்புரேட்டரில் நிரம்பி வழியும் சிக்கல் ஏற்படுகின்றது. இந்த சேம்பர் அல்லது பவுலை சரியாக நிற்கும் செய்வதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதற்கு பின்னர் மோட்டார் சைக்கிள் சரியாக ஐடிலிங் ஆகும்.

கார்புரேட்டரில் உள்ள ஜெட் கருவியை சரி பார்க்கவும்:
அதிக உயரமான இடத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வாகனம் அதிக உயரமான பகுதியில் உள்ள பாதைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பில் மாற்றம் செய்கின்றனர். இதுவே நாளடைவில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது. அதிக எரிபொருள் மற்றும் காற்று உட்செல்ல இந்த செயல் அனுமதிக்கின்றது. இந்த அமைப்பை சரி செய்வதன் வாயிலாக தேவையற்ற எரிபொருள் செலவு மற்றும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

மேலே பார்த்த இவையே உங்கள் பைக் தொடர்ச்சியாக த்ரோட்டிலை எதிர்பார்க்க காரணமானவை ஆகும். ஏர்-டூ-ஃபூயவல் ரேசியோ அட்ஜஸ்ட்மென்ட், ஸ்டாப்பட்-அப் ஃப்யூவல் ஃபில்டர், பாதிக்கப்பட்ட இஎஃப்ஐ இன்ஜெக்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை உள்ளிட்டவற்றாலும் இந்த சிக்கல் இருசக்கர வாகனங்களில் ஏற்படுகின்றது.


Click it and Unblock the Notifications








