ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்...

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்லைனில் புக் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஓலா போல இந்நிறுவனமும் ஆன்லைனில் விற்பனையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஹைபிரிட் விற்பனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அந்நிறுவனம் தனது டீலர்களிடம் மட்டுமல்லாமல் ஆன்லைன் முறையிலும் வாகனங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் டீலர் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

முக்கியமாக ஓலா நிறுவனம் இந்தியாவில் எங்குமே டீலர்ஷிப் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் புக்கிங் மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் கடந்த கொரோனா லாக்டவுண் காலத்தில் பல நிறுவனங்கள் இந்த ஆன்லைன் புக்கிங் முறையை அறிமுகப்படுத்தி அதில் தங்கள் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்களை பெற்றனர். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி செய்தனர். ஆனால் அதன் பின்பு அந்த முறை நிறுத்தப்பட்டது.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

இந்நிலையில் ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் தற்போது மீண்டும் ஹைபிரிட் சேல்ஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் அவர்கள் புக் செய்ய விரும்பும் வாகனத்தை புக் செய்யலாம். ஆனால் கம்பெனி நேரடியாக வாகனத்தை டெலிவரி செய்யாமல் டெலிவரி முகவரிக்கு அருகில் உள்ள டீலர்கள் மூலம் வழங்குகிறது.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

புக் செய்வதர்கள் டீலர்களிடம் சென்று டெலிவரி எடுத்துக்கொள்ளலாம், டீலர்கள் டோர் டெலிவரி வசதியை வழங்கினால் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும். என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது நேரடியாக டெலிவரியை ஓலா நிறுவனம் துரிதமாக செய்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இந்த அனுபவத்தை வழங்க தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமும் முடிவு செய்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

இது குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ சோஹிந்தர் கில் என்பவர் கூறும் போது : "நாங்கள் இன்னும் வாடிக்கையாளர்களை நேருக்கு நேராகச் சந்தித்து , எங்கள் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுடன் பேசி, அவர் விரும்பும் வாகனத்தை ஓட்டி பார்த்தபின்பு வாகனங்களை விற்பனை செய்வதைத் தான் விரும்புகிறோம்.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

சில வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வாகனங்களை வாங்குவதை சௌகரியமாகக் கருதுகின்றனர். அவர்கள் வாகனம் குறித்து கேள்விப்பட்டது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் சொல்வது, மற்ற வாடிக்கையாளர்கள் வாங்கிய வாகனத்தை ஓட்டி பார்த்த அனுபவம் எனப் பல விதமான காரணங்களை வைத்து வாகனத்தை வாங்கத் தயாராகிவிட்டனர். அதனால் ஹைபிரிட் விற்பனையைத் துவங்கியுள்ளோம்" எனக் கூறினார்.

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஓலா நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் பலர் இந்த ரக வாகனங்களை அதிகம் வாங்க யோசித்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெரிய அளவில் இருக்கும். கம்பஷன் இன்ஜின் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல மவுசு எனப் பலர் பேசி வருகின்றனர்,

ஓலாவிற்கு போட்டியாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் . . .

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023ம் நிதியாண்டில் மொத்தம் 2.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிப் தட்டுப்பாடு காரணமாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் வாகன தயாரிப்பில் பெரும் பின்னடைவைச் சந்தித்து. தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகி மீண்டும் வாகன தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, August 1, 2022, 17:49 [IST]
English summary
Hero electric accepts the online booking and delivers to home know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+