தமிழகத்தில் ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குறது இன்னும் ஈஸி!! புதியதாக 3 டீலர்ஷிப் மையங்கள் திறப்பு!
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் அதன் ஆதிக்கத்தை 3 புதிய டீலர்ஷிப் மையங்கள் மூலம் விரிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் நம்பர்.1 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் பிராண்டாக ஹீரோ எலக்ட்ரிக் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா முழுவதும் இதன் டீலர்ஷிப் மையங்கள் விரிவடைந்துள்ளன. இருப்பினும் டீலர்ஷிப் மையங்களை மேலும் சில நகரங்களுக்கும் தொடர்ந்து விரிவுப்படுத்தும் முனைப்பில் ஹீரோ எலக்ட்ரிக் உள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் ஆயிரம் பகுதிகளில் வாடிக்கையாளர் தொடுமையங்களை செயல்படுத்துவதை ஹீரோ எலக்ட்ரிக் நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது தமிழகத்தில் மேலும் 3 டீலர்ஷிப் மையங்கள் வெவ்வேறான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. அவை வருவன,

இதன் மூலமாக ஹீரோ எலக்ட்ரிக்கின் ஆதிக்கம் விரிவடைவது மட்டுமின்றி, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பது முடுக்கிவிடப்படுகிறது. ஹீரோ எலக்ட்ரிக்கின் இந்த 3 புதிய டீலர்ஷிப் மையங்களில் வாகன விற்பனை மட்டுமின்றி, இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான சேவைகளும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் வாகனங்களுக்கான ஆக்ஸஸரீகளும் மற்றவைகளை போல் இந்த 3 புதிய டீலர்ஷிப் மையங்களில் கிடைக்கும்.

தமிழகத்தில் புதிய டீலர்ஷிப் மையங்கள் திறக்கப்பட்டிருப்பது குறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ சோகிந்தர் கில் கருத்து தெரிவிக்கையில், "விழிப்புணர்வு மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு காரணமாக மின்சார இருசக்கர வாகன தேவை அதிகரித்து வருகிறது. எலைட் மோட்டார்ஸ், டிகே மோட்டார்ஸ் மற்றும் ஆல்ஃபா மோட்டார்ஸ் ஆகியவற்றை எங்கள் நெட்வொர்க்குகளுக்கு வரவேற்பதில் ஹீரோவில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்வாறு இவி புரட்சியை ஊக்குவிப்பதால் பெருமாநகரங்களை தாண்டியும் எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் தேவை அதிகரித்துள்ளது. முழுமையான இவி உரிமையாளர் அனுபவத்திற்காக வலுவான டீலர்ஷிப் நெட்வொர்க் மற்றும் சேவை நிலையங்களை அமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். இந்தியாவில் இயக்க மாற்றத்தை கொண்டுவருவது எங்களது தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் தமிழ்நாடு எங்களின் முன்னுரிமை சந்தைகளில் ஒன்றாக இருப்பதால், இங்கு எங்களது இருப்பை மேலும் விரிவுப்படுத்துவோம்." என்றார்.

ஹீரோ எலக்ட்ரிக்கின் தமிழகத்திற்கான முதன்மை அதிகாரி ஹரிதாஸ் கே நாயர் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் விநியோக சூழலை உருவாக்கி, சிறிய மையங்களில் எங்கள் தயாரிப்புகளை வெளிக்கொணர, மாநிலம் முழுவதும் கூட்டணிகளை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பசுமையான இயக்க தீர்வுகள், மேம்படுத்தப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு ஹீரோவில் நாங்கள் அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஹீரோ எலக்ட்ரிக்கின் டீலர்ஷிப் மையங்கள் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப, மிகவும் வசதியான, தனிப்பயனாக்கப்பட்ட புதுமையான மற்றும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குபவைகளாக உள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹீரோ டீலர்ஷிப் மையங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் பயண தேவைகளுக்கு ஏற்ப எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்வு செய்யலாம்.

இதற்கேற்ப ஹீரோ எலக்ட்ரிக்கின் இ-ஸ்கூட்டர்கள் தேவையான சமீபத்திய அப்கிரேட்களை பெற்றுள்ளன. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதன் லித்தியம்-இரும்பு பேட்டரிகளை பெறும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 5 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு நம் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தான் செயல்பாட்டில் இருக்கலாம். ஆனால் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது.


Click it and Unblock the Notifications








