செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனத்தின் எடி (Eddy) மின்சார ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனம் குறித்த இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

தொடர்ச்சியாக புதுமுகங்களை அறிமுகம் செய்தல் மற்றும் சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றல் உள்ளிட்ட காரணங்களினால் நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்திருக்கின்றது, ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric). ஒகினவா, ஏத்தர் எனெர்ஜி, ஆம்பியர் மற்றும் ப்யூர் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மிகக் கடுமையான போட்டியை நிறுவனம் வழங்கி வருகின்றது.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

இந்த நிலையில், இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ எலெக்ட்ரிக் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அந்த எலெக்ட்ரிக் வாகனத்தையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

விற்பனைக்கான அறிமுகம் வெகு விரைவில் இருப்பதை முன்னிட்டே நிறுவனம் இந்த செயலைச் செய்திருக்கின்றது. எடி (EDDY) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே ஹீரோ எலெக்ட்ரிக் வெளியீடு செய்திருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் எடி மின்சார ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

மிகவும் கவர்ச்சியான நிறத்திலும் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். மஞ்சள் மற்றும் லைட் ப்ளூ ஆகிய நிறங்களில் அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர எக்கசக்க தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகளும் எடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

அந்தவகையில், ஃபைண்ட் மை பைக், இ லாக் (பூட்டு), ரிவர்ஸ் மோட், கார்களில் இருப்பதைப் போன்று ஃபாலோ மீ ஹெட்லேம்ப் மற்றும் பெரிய ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவை மின்சார ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நகர்புற பயன்பாட்டைக் கருத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

குறிப்பாக, இளைஞர்கள் ஜிம், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் கம்ஃபோர்ட் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் எதிர்பார்த்ததை விட சற்றுக் கூடுதலாக எடி-யில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

இதேபோல், ஸ்கூட்டரில் என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது என்பது பற்றிய விபரமும் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்த அனைத்து விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் இயக்குநர் நவீன் முன்ஜல் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

அவர் கூறியதாவது, "ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன், அபரிமிதமான தயாரிப்பாக ஹீரோ எலெக்ட்ரிக் எடி காட்சியளிக்கும். இதனை வெளியீடு செய்விதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். எந்த இடையூறும் இல்லாத சவாரி அனுபவத்தை இது வழங்கும். கார்பன் (கரும்புகை) இல்லாத எதிர்காலத்திற்கும் இது உதவும். பெட்ரோல் வாகனங்களுக்கு சிறந்த மாற்று வாகனமாக ஹீரோ எடி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 46,260 யூனிட் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நிறுவனத்தின் கீழ் 600க்கும் அதிகமான விற்பனையாளர்கள் நாட்டின் 325க்கும் அதிகமான நகரங்களில் செயல்பட்டு வருகின்றது.

செம்ம ஸ்டைலான Hero Electric-இன் Eddy மின்சார ஸ்கூட்டர் வெளியீடு! ஓலா இ-ஸ்கூட்டரின் நிலைமை என்னவாக போகுதோ!

நிறுவனம் தனது தயாரிப்புகளை எளிதில் வாடிக்கையாளர்கள் நுகர வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. இத்துடன், சுலப கடனை வழங்கும் வகையில் எஸ்பிஐ போன்ற முன்னணி வங்கிகளுடன் அது கூட்டணி வைத்திருக்கின்றது. இதுதவிர, நாட்டில் மின் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பு: 2 மற்றும் 3 ஆகியவற்றை தவிர அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 1, 2022, 16:48 [IST]
English summary
Hero electric unveiled eddy e scooter ahead of launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+