அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

அப்டேட் செய்யப்பட்ட தோற்றம் மற்றும் வசதிகளுடன் ஹீரோ டெஸ்டினி 125 'எக்ஸ்டெக்' (Destini 125 XTEC) ஸ்கூட்டர் ரூ.79,990 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

ஹீரோ மோட்டோகார்ப் பொதுவாக மோட்டார்சைக்கிள்களுக்கே பிரபலமான பிராண்டாக விளங்குகிறது. ஸ்பிளெண்டர், எச்.எஃப் டீலக்ஸ் மற்றும் கிளாமர் உள்ளிட்ட மாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், ஹீரோ பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகக்கூடிய ஸ்கூட்டராக டெஸ்டினி 125 விளங்குகிறது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

இதனாலேயே அவ்வப்போது இந்த 125சிசி ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் தற்போது புதிய தோற்றம் மற்றும் பாகங்களுடன் டெஸ்டினி மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய பாகங்களாக புதிய எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை மேம்படுத்தப்பட்ட ரெட்ரோ டிசைனில் ஹீரோ டெஸ்டினி பெற்றுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

இதன்படி க்ரோம் தொடுதல்கள் ஸ்கூட்டரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய நெக்ஸஸ் நீல நிறத்தேர்வையும் டெஸ்டினி பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்களில் ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் ஸ்டாண்டர்ட் & எக்ஸ்டெக் என்கிற 2 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69,900 ஆகவும், புதிய எக்ஸ்டெக் வேரியண்ட்டின் விலை அப்டேட்களின்படி ரூ.79,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டரில் ஐ3எஸ் தொழிற்நுட்பம் (ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பு) மற்றும் மொபைல் அழைப்பு & குறுஞ்செய்திக்காக ப்ளூடூத் இணைப்புடன் புதிய டிஜிட்டல் அனலாக் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

இவற்றுடன் யுஎஸ்பி சார்ஜர், சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப் ஆகும் வசதி மற்றும் கூடுதல் சவுகரியத்திற்கு பின் இருக்கை பயணிக்கான முதுகு தலையணை போன்றவற்றையும் ஹீரோ டெஸ்டினி 125 பெறுகிறது. டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டரில் பொருத்தப்படுகின்ற பிஎஸ்6-க்கு இணக்கமான 125சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து ஹீரோ மோட்டோகார்பின் மூலோபய மற்றும் உலகளாவிய தயாரிப்பு திட்டத்திற்கான தலைமை அதிகாரி மாலோ லே மாசன் கருத்து தெரிவிக்கையில், "எக்ஸ்டெக் தொழிற்நுட்ப தொகுப்பு ஆனது மாடர்ன் தொழிற்நுட்பம் மற்றும் பிரிவின் முதல் அம்சத்திற்கான சின்னமாக அதன் பெயரை உருவாக்க தொடங்கியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

கிளாமர் 125, பிளஷர்+ 110 ஆகியவற்றில் எக்ஸ்டெக் பதிப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று, டெஸ்டினி 125இல் அதன் பிரபலத்தை மேலும் வலுப்படுத்தும். டெஸ்டினி எக்ஸ்டெக் ஆனது அதன் புதிய எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் இணைப்பு, க்ரோம் ஸ்ட்ரிப், நேர்த்தியான வேகமானி வடிவமைப்பு, பொறிக்கப்பட்ட பேக்ரெஸ்ட் ஆகியவற்றுடன் நேர்த்தியான கிளாசிக்கை ஒருங்கிணைக்கிறது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

புத்திசாலித்தனமான அன்றாட பயன்பாட்டு வாகனத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், டெஸ்டினி 125 எக்ஸ்டெக் பதிப்பு உங்களுக்கானது" என்றார். மற்ற பிஎஸ்6 ஹீரோ தயாரிப்புகளை போல டெஸ்டினி ஸ்கூட்டரிலும் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. இது பன்மடங்கு காற்று அழுத்த சென்சார், த்ரோட்டல் பொசிஷன் சென்சார் போன்ற வெவ்வேறு விதமான 9 சென்சார்களின் பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

ஹீரோ மோட்டோகார்ப்பின் முதன்மை பிராண்ட் மேம்பாட்டு அதிகாரி ரஞ்சீவ்ஜித் சிங் இந்த புதிய அறிமுகம் குறித்து பேசுகையில், "டெஸ்டினி 125 ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பை கொண்டுள்ளது. ஒரு தனித்துவமான அனுபவத்திற்காக காத்திருக்கும் ரைடர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக்-க்கு ஈர்க்கப்படுவார்கள். புதிய டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஆனது எங்களின் தொடர்ச்சியான தொழிற்நுட்ப முன்னேற்றங்களை காட்டுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகம்!! விலை ரூ.79,990

சவுகரியம் & ஸ்டைலிங் ஆகியவற்றில் தெளிவான கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹீரோ டெஸ்டினி 125 எக்ஸ்டெக், சந்தையில் எங்கள் ஸ்கூட்டர் வரிசையை வலுப்படுத்த போகிறது" என்றார். மேற்கூறப்பட்ட புதிய அப்டேட்களுக்கு ஏற்ப டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச விலை வெறும் 3,000 என்கிற அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ரூபாய்க்கு மேற்கூறப்பட்ட அப்டேட்கள் ஏற்றவைதானா என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 7:30 [IST]
English summary
Hero introduced the new destini 125 xtec variant in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+