பெட்ரோல் ரேட் எகிறும் நிலையில் அடுத்த அதிரடி... ஹீரோ டூவீலர்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) விற்பனை செய்து வரும் இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது வரும் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து வாகனங்களின் விலை உயரவுள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்த தற்போது பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

இதில், சொகுசு கார் நிறுவனங்களும் அடங்கும். ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளன. அத்துடன் டொயோட்டா நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்டவற்றில் ஹீரோ மோட்டோகார்ப் தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களுடைய கார்களின் விலையும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை உயர்வு ஏப்ரல் 5ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களில் டொயோட்டா கார்களின் விலை 4 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3.5 சதவீதம் வரை உயரும் என அதிரடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் சொகுசு கார்களின் விலை 3 சதவீதம் வரை உயரவுள்ளது. புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே, வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சமீபத்தில் வருமான வரி துறை சோதனை நடத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதற்கிடையே இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வாகனங்களின் விலையும் உயரவுள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால், கார் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இந்த பிரச்னையால் கார்களின் உற்பத்தி குறைந்து, விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விற்பனை குறைந்தால், அது வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

நடப்பு மார்ச் மாதம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே அவற்றை முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு விலை உயர்வு பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பதை வாடிக்கையாளர்கள், டீலர்களிடம் முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்வதும் நன்மை பயக்கும். விலை உயர்வு காரணமாக ஒரு சிலர் முன்கூட்டியே வாகனங்களை முன்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில், புதிய வாகனம் வாங்கும் தங்கள் முடிவை ஒரு சிலர் தள்ளி போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








