ஆண்களுக்கு இதுபோல எந்தவொரு ஆஃபரையும் அறிவிக்கலையே! பெண்கள் தினத்துக்கு பெரும் தள்ளுபடி சலுகையை அறிவித்த ஹீரோ!
சர்வதேச பெண்கள் தினத்தில் பெண் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. ஆண்களுக்கு இப்படி ஒரு சலுகையை நிறுவனம் அறிவிக்கலையே என பொறாமையை ஏற்படுத்தும் வகையில் இச்சலுகை உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் ஆகும். இந்த தினத்தை முன்னிட்டு முன்னணி நிறுவனங்கள் பல சிறப்பு சலுகைகளை, பெண் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அறிவித்தன. அவற்றின் வரிசையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்-ம் இணைந்துள்ளது.

நிறுவனம் பெண்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சிறப்பு போனஸ் சலுகை ஒன்றை அறிவித்திருக்கின்றது. ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி மற்றும் பலன்களை அது அறிவித்திருக்கின்றது. இந்த சலுகை ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலுகையின் விபரம்:
ரூ. 4 ஆயிரம் கேஷ் போனஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களுக்கும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், கூடுதலாக எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் லாயல்டி போனஸாக ரூ. 2 ஆயிரம் வரை டெஸ்டினி 125 ஸ்கூட்டருக்கு வழங்கப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது.

மார்ச் 11ம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். பெண்கள் பெயரில் எடுத்தால் மட்டுமே இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பன்முக மாடல் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என டூ-வீலர்கள் பிரிவிலும் அதிக தேர்வுகளை அது வழங்குகின்றது. அந்தவகையில், ஹீரோ நிறுவனம் பிளஷ்ஷர், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இவற்றின் பக்கம் பெண் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ரூ. 62,220 முதல் ரூ. 82,320 வரையில் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நிறுவனம் அதிக விலைக் கொண்ட ஸ்கூட்டராக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 இருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் இணைப்பு வசதி சிறப்பம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், இன்னும் சிறப்பு வசதிகளை இந்த ஸ்கூட்டரில் நிறுவனம் வழங்குகின்றது. இத்தகைய சிறப்புகள் கொண்ட வாகனத்திற்கே நிறுவனம் பிரத்யேகமாக சலுகையை அறிவித்திருக்கின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக சமீபத்தில் 108 மோட்டார் பைக்குகளை ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு வழங்கியது. தனது சமூக பொதுநல பங்களிப்பு கரத்தின் வாயிலாக இந்த சம்பவத்தை நிறுவனம் நிகழ்த்தியது. இந்த மோட்டார்சைக்கிள் அனைத்தும் பெண்களின் பாதுகாப்புக்கான பணியில் ஈடுபடுத்தும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








