ஸ்பிளெண்டர் மட்டும் ஒரு மாசத்துக்கு எத்தன யூனிட் விற்பனையாவுது தெரியுமா?.. ஹீரோவின் பெஸ்ட் செல்லிங் பைக்குகள்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டாப் ஐந்து அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. எனவேதான் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதும் விற்பனையில் உச்சத்தில் இருக்கின்றன.

பராமரிப்பு மற்றும் அதிக தரம் கொண்டவையாக இருப்பதாலும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் மாடலுக்கு மக்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2,33,321 யூனிட்டுகள் இந்த ஒற்றை பைக் மாடல் விற்பனையாகியிருக்கின்றது.
இது கடந்த ஆண்டு அக்டோபரைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையாகும். இருப்பினும், விற்பனைக்கு வந்த பல ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இப்போதும் இந்த இருசக்கர வாகன மாடல் லட்சக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. 2021 அக்டோபர் மாதத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் 2,42,992 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
நடப்பாண்டு அக்டோபரைக் காட்டிலும் இது சுமார் பத்தாயிரம் யூனிட் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மாடலாக ஸ்பிளெண்டர் இருக்கின்றது. நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பைக்காக இது இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி 100 சிசி, 110 சிசி மற்றும் 125 சிசி ஆகிய திறன்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஸ்பிளெண்டருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் எச்எஃப் டீலக்ஸ் இருக்கின்றது. இந்த பைக் மாடலின் விற்பனை பாதிக்கு பாதி சரிந்துக் காணப்படுகின்றது. 2021 அக்டோபரில் 1.64 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகிய இந்த பைக் மாடல், 2022 அக்டோபரில் 78,076 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. இது மிகப் பெரிய சரிவு ஆகும்.
இருப்பினும், நிறுவனத்தின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாக இது இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக பேஷன் பைக் இருக்கின்றது. மேற்கண்ட இரு தயாரிப்புகளைப் போலில்லாமல் இந்த இருசக்கர வாகனம மாடல் பெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் வெறும் 17,666 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில் நடப்பாண்டு அக்டோபரில் 31,964க்கும் அதிகமான யூனிட்டுகள் அது விற்பனையாகி இருக்கின்றது.
இதேபோல் நிறுவனத்தின் 125 சிசி ஸ்பிளெண்டர் மற்றும் கிளாமர் ஆகிய இரு பைக் மாடல்களும்கூட இந்தியாவில் நல்ல விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் 24,829 யூனிட்டுகள் மட்டுமே ஸ்பிளெண்டர் 125 விற்பனையாகிய நிலையில், நடப்பாண்டில் அக்டோபரில் 28,400 யூனிட்டுகளும், கிளாமர் பைக் 25,663 யூனிட்டுகளில் இருந்து 28,335 யூனிட்டுகளும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.
நிறுவனத்தின் முதன்மையான இரு தயாரிப்புகள் கைவிட்டிருக்கின்ற போதிலும் பேஷன், ஸ்பிளெண்டர் (125 சிசி) மற்றும் கிளாமர் ஆகியவை நிறுவனத்திற்கு கைக் கொடுத்திருக்கின்றது. இது நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவலாக அமைந்திருக்கின்றது.
நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகன மாடல்கள் சரிவைக் காண்பதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இருப்பினும், இப்போது சந்தையில் போட்டி பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே கணிசமான அளவில் இந்நிறுவனம் விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








