ஹீரோவின் மலிவு விலை டூரிங் ரக பைக் விற்பனைக்கு அறிமுகம்.. இதைவிட விலை குறைவா வேற யாருமே இந்த ரக பைக்கை விற்கல!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த டூரிங் ரக மோட்டார்சைக்கிள் என்னென்ன வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டு உள்ளன என்பது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதன் புத்தம் புதிய எக்ஸ்பல்ஸ் 200டி 4வி (Hero XPulse 200T 4V) மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்பல்ஸ் 200டி பைக் மாடலைக் காட்டிலும் இது அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 வால்வ் ஆயில் கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி 4வி

இந்த இருசக்கர வாகனத்திற்கு அறிமுக விலையாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 726 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மிக சிறந்த டூரிங் திறன் கொண்ட இந்த இருசக்கர வாகனமாக புதிய எக்ஸ்பல்ஸ் 200டி 4வி பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. 4 வால்வுகள் இந்த பைக்கின் மோட்டாரில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கும் அதன் பெயரில் '4வி' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே இருசக்கர வாகனத்தை முன்பை விட அதிக திறன் வாய்ந்ததாக மாற்றியிருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் முன்பைக் காட்டிலும் 6 சதவீதம் அதிக பவர் மற்றும் 5 சதவீதம் அதிக டார்க் திறனை வெளியேற்றும் வகையில் இந்த மோட்டார் ட்யூன்-அப் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், மிக சிறப்பான சாகச ரைடை விரும்புவர்களுக்கு இந்த டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி 4வி நல்ல அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி 4வி

இந்த டூ-வீலரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக சிறந்த டூரிங் ரக வாகனமாக மட்டுமே உருவாக்கவில்லை. அதனை, சூப்பரான 'ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் டெக்னாலஜி' ( state-of-the-art technology) மற்றும் அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்டலிஜன்ட் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜர், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த டிஜிட்டல் திரை ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது. இத்துடன், கியர் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் சர்வீஸ் ரிமைண்டர் ஆகியவற்றை நமக்கு வழங்கும். ஆகையால், இந்த இருசக்கர வாகனம் ஸ்டிரெஸ் ஃப்ரீ ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுதவிர, மிக சிறந்த கம்ஃபோர்ட்டான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலும் இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி 4வி

இளம் தலைமுறையினரையும், அதிக தூரம் இருசக்கர வாகன டிராவல் செய்ய விரும்புவர்களையும் கவரும் விதமாக இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியா கொண்டு வந்திருக்கின்றது. ஏற்கனவே கூறியதை போல் இந்த பைக்கில் 200 சிசி 4 வால்வு ஆயில் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள ஏதுவான மோட்டார் இதுவாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 19.1 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் உயர் வேகத்தில் மிக சிறப்பாக இயங்கும் வகையில் இந்த கியர்பாக்ஸும், மோட்டாரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க, இந்த பைக்கை மிக சிறந்த நியோ-ரெட்ரோ ஸ்டைல் கொண்டதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கியிருக்கின்றது. இதற்காக போல்டான அணிகலன்கள் மற்றும் கிராஃபிக்குகள் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குரோம் வளையத்தால் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவ முழு எல்இடி ஹெட்லேம்ப், ட்யூப் ரக ரெட்ரோ பில்லியன் ரைடருக்கான கை பிடி, விஷர், முன் பக்க ஃபோர்க்கிற்கு ஸ்லீவ் மற்றும் வண்ண மயமான சிலிண்டர் ஹெட் உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன் மிக சிறந்த இயக்கத்திற்காக பைக்கில் முன் பக்கத்தில் 37 மிமீ முன் பக்க ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள கூடிய மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 276 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 220 மிமீ டிஸ்க் பின் வீலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பைக்கை மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் ஃபங்க் லைம் யெல்லோ மற்றும் மேட் ஷீல்டு கோல்டு ஆகியவையே அந்த நிறங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 12:05 [IST]
English summary
Hero motocorp launched xpulse 200t 4valve
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+