இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹீரோ பைக் எதுன்னு தெரியுமா? அதேதான்!
இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் டூவீலர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,34,085 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,93,508 ஆக மட்டுமே இருந்தது. இது 20.97 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 71,294 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 1,00,601 ஆக உயர்ந்துள்ளது. இது 41.11 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ க்ளாமர் பைக் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23,627 க்ளாமர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 20,796 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஹீரோ க்ளாமர் பைக்குகளின் விற்பனை 11.98 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்த பட்டியலில் ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18,298 ப்ளஷர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 12,303 ஆக சரிந்துள்ளது. இதன் காரணமாக ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர்களின் விற்பனை 32.76 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பட்டியலில் ஹீரோ பேஷன் பைக் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17,748 ஆக இருந்த ஹீரோ பேஷன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 10,384 ஆக குறைந்துள்ளது. இது 41.49 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 8,981 டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 9,121 ஆக இருந்தது. இது 1.53 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ மேஸ்ட்ரோ ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4,680 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 4,154 ஆக குறைந்துள்ளது. இது 11.24 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,293 எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 3,981 ஆக உயர்ந்துள்ளது. இது 73.62 ஆக சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,045 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 3,179 ஆக உயர்ந்துள்ளது. இது 55.45 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய பைக்குகள் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ஹீரோ க்ளாமர், ஹீரோ ப்ளஷர், ஹீரோ பேஷன், ஹீரோ டெஸ்ட்டினி 125, ஹீரோ மேஸ்ட்ரோ ஆகிய தயாரிப்புகள் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. வரும் காலங்களில் விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








