ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகும் தேதி இதுதான்... டிவிஎஸ்-பஜாஜ் நிறுவனங்களுக்கு ஆப்பு தயார்!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் எப்போது வெளியீட்டைப் பெற இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தகவல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிறுவனம் தற்போது பெட்ரோலால் இயங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், மிக விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியிலும் ஈடுபட இருக்கின்றது.

இதுகுறித்த அறிவிப்பை ஏற்கனவே நிறுவனம் வெளியிட்டுவிட்டது. ஆனால், அதனை ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டின்கீழ் இல்லாமல், புதிய விடா (Vida) எனும் பிராண்டின் கீழே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர் காட்சிப்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விடா பிராண்டின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்போது வெளியீட்டை பெற இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி அன்றே நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை முதல் முறையாக வெளியீடு செய்ய இருக்கின்றது.

இதுகுறித்த விபரமே தற்போது வெளியாகியுள்ளது. புதுமுக மின்சார ஸ்கூட்டர் பற்றிய வேறு எந்த விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. ஹீரோ மோட்டோகார்ப் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மிகப் பெரியளவில் வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் மாஸ் புராடெக்டாக ஸ்பிளெண்டர் பைக் இருக்கின்றது. இதை போல முன்னணி இருசக்கர வாகனமாக விரைவில் வெளியீட்டைப் பெற இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திகழ இருக்கின்றது. ஆகையால், மக்கள் மத்தியில் புதுமுக எலெக்ட்ரிக் வாகனம் குறித்து ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இவ்வாகனம் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் சித்தூர் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் உற்பத்தி பணிகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், விரைவில் விடா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இப்புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவை விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன.

தற்போது இந்திய சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய இரு நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக இரு நிறுவனங்களுக்கும் போட்டியளிக்கும் வகையில் ஹீரோ மோட்டாகார்ப் புதிய விடா பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தைக் களமிறக்க இருக்கின்றது. ஆகையால், இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தை விரைவில் சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








