H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக்கின் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படக்கூடிய மோட்டார்சைக்கிள்களுள் ஹீரோ பேஷன் மாடலையும் ஒன்று என தாராளமாக கூறலாம். இந்த ஹீரோ மாடல் முன்பு ப்ரோ டிஸ்க் மற்றும் ட்ரம் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பேஷன் பைக்கின் வேரியண்ட்கள் வரிசையை மேலும் விரிவுப்படுத்தும் பணியில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுப்பட்டு வந்தது.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

இதன்படி புதிய பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிகளுடன் ஹீரோ பேஷன் பைக்கின் புதிய எக்ஸ்டெக் வேரியண்ட் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய பேஷன் எக்ஸ்டெக் வேரியண்ட்டை விளம்பரப்படுத்தும் விதமாக புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோ ஒன்றினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இரவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடியோவில், பைக்கின் எல்இடி ஹெட்லைட் ஆனது ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்ற ஹீரோ பேஷன் வேரியண்ட்களில் ஹலோஜன் ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், புதிய எக்ஸ்டெக் வேரியண்ட்டில் மட்டும் ஒருங்கிணைக்கப்பட்ட H-வடிவ எல்இடி டிஆர்எல்-கள் உடன் புதுமையான டிசைனில் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

இது வழக்கமான ஹலோஜன் யூனிட்டை காட்டிலும் 12% வரையில் அதிக பிரகாசத்தை வழங்கக்கூடியது என தற்போது வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோவில் சிறப்பம்சமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ட்ரம் & டிஸ்க் என இரு விதமான பிரேக் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேஷன் எக்ஸ்டெக் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.74,590 மற்றும் ரூ.78,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பிற்கு ஏற்ப பைக்கின் மொத்த முன்பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனித்துவமான உடல் கிராஃபிக்ஸை பெற்றுள்ள புதிய பேஷன் எக்ஸ்டெக் வேரியண்ட்டில் நீல நிற பேக்க்ரவுண்ட்டை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நிஜ-நேர மைலேஜ், குறை-எரிபொருள் மற்றும் சேவை & பராமரிப்பு தேவைப்படுவதற்கான எச்சரிக்கைகளை பெறலாம்.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

ஏற்கனவே கூறியதுபோல், இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக புதிய பேஷன் எக்ஸ்டெக் பைக் ப்ளூடூத் சார்ந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியினை பெற்றுள்ளது. இதன் மூலம் மொபைல் போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த எச்சரிக்கைகளை பெற முடியும். இவற்றுடன் யுஎஸ்பி சார்ஜிங், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட முப்பரிமாண பிராண்ட் லோகோ மற்றும் பிரீமியம் தோற்றத்திற்காக பெட்ரோல் டேங்கில் ரிம் டேப் உள்ளிட்டவையும் புதிய பேஷன் எக்ஸ்டெக் பைக்கில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருப்பதை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் சுட்டிக்காட்டும் வசதி மற்றும் என்ஜின் கட்-ஆஃப் பொத்தான் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன் டிஸ்க் வேரியண்ட்டில் காம்பி-பிரேக் அமைப்பு (சிபிஎஸ்)-யும் சிறந்த ஹேண்ட்லிங்கிற்காக பெறலாம். மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

பேஷன் ப்ரோ பைக்கின் வழக்கமான 113சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் தான் இந்த புதிய வேரியண்ட்டிலும் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 9.12 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 9.79 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சிறந்த எரிபொருள் திறனிற்காக இந்த என்ஜின் அமைப்பில் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் அமைப்பும் (ஐ3எஸ்) வழங்கப்படுகிறது.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

புதிய பேஷன் எக்ஸ்டெக் பைக்கிற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 வருட உத்தரவாதத்தை நிலையான தேர்வாக வழங்குகிறது. விற்பனையில் ஹீரோ பேஷன் பைக்கிற்கு டிவிஎஸ் ரேடியான், பஜாஜ் பிளாட்டினா, ஹோண்டா லிவோ மற்றும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்குகின்றன.

H-வடிவ ஹெட்லைட் உடன் அசரடிக்கும் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்!! விலை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!

இவற்றுடன் சொந்த ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் மாடலும் போட்டியாக உள்ளது. பேஷன் மற்றும் ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிள்களில் மட்டுமின்றி, கிளாமர் 125, பிளஷர்+ மற்றும் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களிலும் எக்ஸ்டெக் வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2022, 16:27 [IST]
English summary
Hero released new tvc for passion xtec find here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+