கருப்பு கலர்ல வேற லெவல்ல உருவாக்கியிருக்காங்க... சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் அறிமுகம்!
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் (Hero Super Splendor Canvas Black Edition) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தின் விலை மற்றும் பிற முக்கிய சிறப்புகள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக் வரிசையில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் (Hero Super Splendor Canvas Black Edition) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதனை பிரத்யேகமாக கருப்பு நிறத்தினாலேயே முழுக்க முழுக்க ஹீரோ அலங்கரித்திருக்கின்றது.

இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 77,430 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டிரம் பிரேக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக் டிஸ்க் பிரேக் வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 81,330 ஆகும். இவ்விரு விதமான தேர்வுகளிலேயே சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இந்த புதுமுக பைக்கிற்கான புக்கிங் பணிகள் நிறுவனத்தின் இ-ஷாப் வாயிலாக தொடங்கியிருக்கின்றது. அதாவது, ஆன்-லைன் தளம் வாயிலாக தொடங்கியிருக்கின்றது. இது ஓர் 125 சிசி திறன் கொண்ட கம்யூட்டர் ரக இருசக்கர வாகனமாகும். அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் ஆகும். இத்தகைய ஓர் பைக்கையே ஓர் கவர்ச்சியான தோற்றத்தில் ஹீரோ தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் வழக்கமான ஸ்பிளெண்டரிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக முழுமையாக கருப்பு நிறத்தினாலேயே சூப்பர் ஸ்பெண்டரை ஹீரோ அலங்கரித்திருக்கின்றது. இதுதவிர, குரோம் நிறத்திலான பேட்ஜும் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பைக்கின் ஃப்யூவல் டேங்க், சூப்பர் ஸ்பிளெண்டர் எனும் எழுத்து ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கை மிக அழகாக காண்பிக்கும் வகையில் இது கையாளப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இன்னும் சில இடங்களிலும் குரோம் பூச்சுக் கொண்ட அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், ஹெட்லைட் மற்றும் எக்சாஸ்ட் பகுதிகளிலும் குரோம் அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கூறுகளை நம்மால் வெளிப்படையாக் காண முடிகின்றது. இதுபோன்ற கணிசமான மாற்றங்களையே புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் எடிசனில் ஹீரோ மோட்டோகார்ப் செய்திருக்கின்றது.

அதேவேலையில், பைக்கின் டிசைன் மற்றும் பிற விஷயங்களில் எந்தவொரு பெரியளவிலான மாற்றத்தையும் ஹீரோ செய்யவில்லை. இதை புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பிளாக் அண்ட் அக்செண்ட் தேர்வை பார்க்கையிலேயே நமக்கு தெளிவாக தெரிகின்றது. வழக்கமான சூப்பர் ஸ்பிளெண்டருடன் ஒத்துபோகும் வகையிலேயே அதன் தோற்றம் இருக்கின்றது.

சிங்கிள் பாட் ஹெட்லைட், டின்டட் விஷர், சிங்கிள் பீஸ் இருக்கை அமைப்பு, அலாய் வீல்கள் மற்றும் ஸ்லங் எக்சாஸ்ட் ஆகியவை பிளாக் மற்றும் அக்செண்ட் ஸ்பிளெண்டர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இருசக்கர வாகனத்தில் பிஎஸ் 6 தர எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஓர் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். ஏர் கூல்டு எஞ்ஜின் இதுவாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக10.7 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 10.6 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த இயக்க அனுபவத்திற்காக இருசக்கர வாகனத்தில் டெலிஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், 5 அட்ஜெஸ்டபிள் ரியர் ஸ்பிரிங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் பிரேக்கிங் அனுபவத்திற்காக 130 மிமீ டிரம் பிரேக்கும், டிஸ்க் பிரேக் வெர்ஷனில் 240 மிமீ ரோட்டார் முன் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரம் என அனைத்து வேரியண்டுகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான சூப்பரான அம்சங்களுடனேயே ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிளாக் அண்ட் அக்செண்ட் வெர்ஷன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








