இன்னும் 4 நாள்தான் இருக்கு... ஹீரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் பிராக்டிக்கல் (Practical) என்ற நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரகத்தில் ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Splendor Plus), ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் (Splendor Plus XTEC), ஹெச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe) மற்றும் ஹெச்எஃப் 100 (HF 100) ஆகிய பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் (Executive) என்ற ரகத்திலும் பல்வேறு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் 4 நாள்தான் இருக்கு... ஹீரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

அவை க்ளாமர் (Glamour), க்ளாமர் எக்ஸ்டெக் (Glamour XTEC), க்ளாமர் கேன்வாஸ் (Glamour Canvas), பேஷன் எக்ஸ்டெக் (Passion XTEC), பேஷன் ப்ரோ (Passion Pro) மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் (Super Splendor) ஆகியவை ஆகும். மேலும் பெர்ஃபார்மென்ஸ் (Performance) என்ற ரகத்தில், எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R), எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Xtreme 200S), எக்ஸ்பல்ஸ் 2004வி (Xpulse 200 4V) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி (Xpulse 200T) ஆகிய பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர 4 ஸ்கூட்டர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. அவை ப்ளஷர் ப்ளஸ் எக்ஸ்டெக் (Pleasure Plus XTEC), டெஸ்ட்டினி 125 எக்ஸ்டெக் (Destini 125 XTEC), மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Maestro Edge 125) மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (Maestro Edge 110) ஆகியவை ஆகும். இந்த சூழலில் தனது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை (Price) அதிரடியாக உயர்த்தவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்த்தால், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 1,500 ரூபாய் வரை உயரவுள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். என்றாலும் ஒட்டுமொத்தத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தயாரிப்புகளின் விலை 1,500 ரூபாய் வரை உயரவுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாக, பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த திடீர் நடவடிக்கையால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தொடர்ந்து வேறு சில நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்காக விடா (Vida) என்ற புதிய பிராண்டு ஒன்றை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிராண்டின் கீழ், விடா வி1 (Vida V1) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். அனேகமாக வரும் 2023ம் ஆண்டில், ஹோண்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Hero to hike bike scooter prices by up to rs 1500
Story first published: Saturday, November 26, 2022, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X