ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட்?

ஹீரோ நிறுவனம் விடா வி1 ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் மார்கெட்டில் அந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரையும் இங்கே ஒப்பீடு செய்துள்ளோம். இது குறித்த விரிவாக காணலாம்.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பிலிருந்த விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு வழியாக அறிமுகமாகிவிட்டது. இந்த ஸ்கூட்டரின் ஈர்க்க வைக்கும் டிசைன் மொழி மற்றும் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள் எல்லாம் ஈர்க்க வைக்கும் வகையில் இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் நேரடியாக ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் உடன் போட்டியிடுகிறது. இந்த போட்டியில் இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் எது பெஸ்ட்? எது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறது? வாருங்கள் காணலாம்

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

விடா வி1 ஸ்கூட்டரின் லுக்கை பொருத்தவரை மினிமல் லுக்கில் ஹேண்ட்சம்மாக இரக்கிறது. இதன் ஷார்ப்பான முன் பக்க லுக், பெரிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மெல்லிய எல்இடி இன்டிகேட்டர்கள் இந்த ஸ்கூட்டருக்கு ஃபங்கியான லுக்கை தருகிறது. இருந்தாலும் அம்சங்களில் இந்த ஸ்கூட்டர் மார்டன் ஸ்கூட்டராக அதன் அம்சங்கள் ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் 3ம் தலைமுறை ஸ்கூட்டரை பொருத்தவரை பழைய தலைமுறையிலிருந்த ஸ்டைலில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த ஸ்கூட்டரின் முகப்பு பகுதியில் உள்ள ஏப்ரான் மவுண்டட் எல்இடிஹெட்லைட் மற்றும் ஸ்லீக்கான பாடி கிளாடிங் எனப் பல விஷயங்கள் இந்த ஸ்கூட்டருக்கு சிறந்த லுக்கை தருகிறது. டிசைன் என்பது ஸ்கூட்டருக்கான லுக் தானே தவிர இது நிச்சயம் எந்த ஸ்கூட்டரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு அம்சமாக இருக்காது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

விடா வி1 ப்ரோ மற்றும் வி1 ப்ளஸ் ஆகிய 2 ஸ்கூட்டர்களும் ஐபி 68 ரேட்டிங் மோட்டாரை கொண்டது. இந்த மோட்டார் ஸ்கூட்டரை அதிகபட்சம் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்க வைக்கும். வி1 ப்ரோ ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.2 நொடியிலும், வி1 ப்ளஸ் ஸ்கூட்டர் 3.4 நொடியிலும் எட்டி பிடிக்கும் அளவிற்கு திறன் கொண்ட. இந்த ஸ்கூட்டரிலும் ஒரே மோட்டார் தான் இருக்கிறது. இது அதிகபட்சமாக 6 கிலோ வாட் பவரையும் 3.9 கிலோ வாட் பவரை தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 6 கிலோ வாட் பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் பின்பக்க வீலீல் பெல்ட் டிரைவ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஹீரோ விடா வி1 ப்ளஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை 3.44 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியன் டிரைவிங் சைக்கிளின் படி 143 கி.மீ ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது. வி1ப்ரோ ஸ்கூட்டரைபொருத்தவரை 3.94 கிலோ வாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஐடிசி ரேஞ்சாக 165 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 3.7 கிலோவாட்ஹவர் ரிமூவ் செய்ய முடியாத லித்தயம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது எக்கோ மோடில் 105 கி.மீ ரேஞ்சையும், ரைடு மோடில் 85 கிமீ ரேஞ்சையும் தருகிறது. ஐடிசி ரேஞ்சாக இந்த ஸ்கூட்டருக்கு 146 கி.மீ ரேஞ்ச் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஹீரோ விடா வி1 ஸ்கூட்டரில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சன்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிற்கு முன்பக்க டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கிங்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்க 12 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450 எஸ்க் ஸ்கூட்டரும் அதே டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றம் மோனோ ஷாக் அப்சர்பர், வழங்கப்பட்டுள்ளது. இருண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. வீல்களின் அளவும் ஹீரோ விடாவில் உள்ள அதே 12 இன்ச் வீல்கள் தான் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

அம்சங்களைப் பொருத்தவரை விடா வி1 ஸ்கூட்டரில் 7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 4 ரைடிங் மோட்கள், கீலெஸ் ஆக்ஸெஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450 எஸ்க் ஸ்கூட்டரும் இதற்கு ஒன்றும் சளைத்தது இல்லை. இந்த ஸ்கூட்டரிலும் கனெக்டிவிட்டி இன்பில்டு ஃபுல் பிளெட்ஜ்டு கூகுள் நேவிகேஷன், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலர்ட், மியூசிக் கண்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட், டிஜிட்டல் டாகுமெண்ட் ஸ்டோரேஜ், உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

விடா வி1 ப்ளஸ் ஸ்கூட்டர் ரூ1.15 லட்சம் என்ற விலையிலும், விடா வி1 ப்ரோ ஸ்கூட்டர் ரூ1.59 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட அதிகமாக இருந்தாலும், இதன் பேக்கேஜ் மற்றும் டிசைனிற்கு இந்த விலை ஒர்த் தான்.

ஹீரோ விடா வி1 ஏத்தர் 450 எக்ஸ் இந்த இரண்டில் எது பெஸ்ட் . . .

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ரூ1,57,400 என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதில் விடா வி1 ஸ்கூட்டரை விட பெர்ஃபாமென்ஸ், மற்றும் அம்சங்கள் சற்று அதிகம் தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 8, 2022, 19:06 [IST]
English summary
Hero vida v1 vs ather 450x electric scooter comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+