என்ன எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் ரேலி எடிசனா? இந்த பைக்கால ஹீரோ நிறுவனத்துக்கு வெற லெவல் பேரு கிடைக்கபோகுது!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அதன் மலிவு விலை அட்வென்சர் டூரர் பைக் மாடலான எக்ஸ்பல்ஸ் 200 4வி (Hero Xpulse 200 4V) -இல் புதிதாக ரேலி எடிசன் (Rally Edition) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்பைக்கை முதல் முறையாக நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மிக விலைக் குறைவான அட்வென்சர் டூரர் பைக் என்றால் அது ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 4வி (Hero Xpulse 200 4V) மாடல்தான். இது ஓர் ஆரம்ப நிலை அட்வென்சர் டூரர் ரக பைக்காகும். சிறிய எஞ்ஜின் கொண்ட அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.

இதைவிட அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கே இன்று (ஜூலை 9) முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதிக அட்வென்சர் அம்சங்கள் இந்த வெர்ஷனுக்கு நிறுவனம் ரேலி எடிசன் (Hero Xpulse 200 4V Rally Edition) என்ற பெயரை வைத்திருக்கின்றது.

Source: Rushlane
ஹீரோ நிறுவனம் இந்த ரேலி பதிப்பை மட்டுமின்றி ஏற்கனவே எக்ஸ்பல்ஸ் 200 4வி இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக 'ரேலி கிட்' ஒன்றையும் உருவாக்கி வருகின்றது. இந்த கிட்டைக் கொண்டு வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டார்சைக்கிளைகூட புதிய ரேலி ரக வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும்.

நிறுவனம் ஏற்கனவே இப்பைக்கிற்காக ஓர் ரேலி கிட்டை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்துகுந்தது. அதன் விலை ரூ. 38 ஆயிரம் ஆகும். இந்த கிட்டைவிட பன்மடங்கு மேம்படுத்த கிட்டாக புதிய ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், இதன் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உருவத்திலும், தோற்றத்திலும் பல மடங்கு மாற்றம் கொண்டதாக புதிய ரேலி எடிசன் எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது. குறிப்பாக உயரம், வீல் பேஸ் மற்றும் நீளம் ஆகிய அளவுகளில் கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதேபோல், வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200, கிட் பொருத்தப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ரேலி எடிசன் எக்ஸ்பல்ஸ் 200 ஆகியவற்றிற்கு இடையே எடையும் மாறுபட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை வழங்கும் விதமாக இன்னும் பல சிறப்பு வசதிகளும் புதிய எக்ஸ்பல்ஸ் 200 இல் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 19 பிஎச்பி மற்றும் 17.35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் ரூ. 1.32 லட்சம் என்கிற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் இதைவிட சற்று அதிக விலையுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அதில் புதிய எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன், உயரமான ஹேண்டில் பார், ஒயர் ஸ்போக்ட் வீல், இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவையே புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசனை அதிக அட்வென்சர் அம்சம் கொண்ட பைக்காக மாற்றவிருக்கின்றன. இந்த பைக்கை இந்தியாவில் மட்டுமின்றி துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு வழங்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கானது ரூ. 1.32 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைவிட சற்று அதிக விலையிலேயே ரேலி எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








