ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்.. நம்ப முடியாத குறைவான விலையில் களமிறக்கியிருக்காங்க!
அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் (Xpulse 200 4V Rally Edition) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V) பைக்கை அட்டகாசமான வாகனமாக மாற்றக் கூடிய ஓர் கிட்டை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரேலி கிட் (Rally Kit) எனும் பெயரில் அது தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த கிட்டின் அறிமுகத்தின்போது, விரைவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே ரேலி எடிசன் எனும் சிறப்பு பதிப்பு எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த தகவலே தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், நிறுவனம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் (Xpulse 200 4V Rally Edition)-ஐ இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ரூ. 1.52 லட்சம் அதன் விலையாகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்காக தனியாக ரேலி கிட்டை வாங்க வேண்டும் எனில் ரூ. 46 ஆயிரம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த பிரத்யேக ரேலி கிட் வாயிலாக, மேக்ஸிஸ் ரேலி டயர்கள், ரேலி ட்யூன்ட் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் 220 மிமீ நீளம் கொண்ட டிராவல் சஸ்பென்ஷன் (பின் பக்கத்திற்காக), 250 மிமீ நீளம் கொண்ட டிராவல் அட்ஜெஸ்டபிள் கார்ட்ரிட்ஜ் சஸ்பென்ஷன் (முன் பக்கத்திற்காக), ஹேண்டில் பார் ரைசர்ஸ், ஃபிளாட் டால் பென்ச் ரக இருக்கை, எக்ஸ்டென்டட் கியர் பெடல் மற்றும் எக்ஸ்ட்ரா லாங் சைடு ஸ்டாண்டு ஆகிய சிறப்பு கருவிகள் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தும் வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை அட்டகாசமான ரேலி பைக்காக மாற்றுவதோடு இல்லாமல், அதனை மிக சிறந்த அட்வென்சர் பைக்காகவும் மாற்ற உதவும். ஏற்கனவே, வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் அட்வென்சர் பயணங்களுக்கான அம்சங்கள் பல வழங்கப்பட்டிருந்தாலும், இந்த ரேலி எடிசன் வாயிலாக அந்த பைக்கை இன்னும் மிக முரட்டுத்தனமான ரேலி பைக்காக மாற்றிக் கொள்ள முடியும்.

இத்தகைய கருவிகளை ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட வாகன மாடலாகவே ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் ரேலி எடிசன் பைக் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரேலி எடிசனில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து கருவிகளும் ஆஃப்-ரோடு பயணத்தை ஸ்மூத்தானதாக மாற்ற உதவியாக இருக்கும். குறிப்பாக, சாகச பயணத்தை மேற்கொள்ள இந்த அனைத்து அம்சங்களும் உதவியாக இருக்கும்.

இந்த மாதிரியான சூப்பரான பைக்கையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இப்பைக்கிற்கான ப்ரீ-புக்கிங் வரும் ஜூலை 22 ஆம் தேதி 12 மணியளவில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக வலை தளம் வாயிலாக புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஜூலை 29, மதியம் 12 மணி வரை மட்டுமே இப்பைக்கிற்கான புக்கிங்குள் ஏற்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இப்பைக் விற்பனைக்கு வழங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஹீரோ நிறுவனம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட், 4 ஸ்ட்ரோக், 4 வால்வுகள் அடங்கிய மோட்டாரே பயன்படுத்தியிருக்கின்றது.

இந்த மோட்டாரே வழக்கமான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், ரேலி எடிசன் மற்றும் வழக்கமான பதிப்பு இரண்டும் எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.9 பிஎச்பி மற்றும் 17.35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இருசக்கர வாகனத்தை கூடுதலாக அலங்கரிக்கும் பொருட்டு எல்இடி ஹெட்லைட், டிஆர்எல்-கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி என எக்கசக்க அம்சங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








