லிஸ்ட்லையே இல்லாத டூ-வீலரை சர்ப்ரைஸாக களமிறக்கிய ஹோண்டா... குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹோண்டா (Honda Motorcycle & Scooter India), டியோ ஸ்போர்ட்ஸ் (limited-edition Dio Sports) எனும் சிறப்பு ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda Motorcycle & Scooter India), அதன் பிரபல ஸ்கூட்டர் மாடலான டியோ (Dio)-வில் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. 'டியோ ஸ்போர்ட்ஸ்' (Dio Sports) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த இருசக்கர வாகனத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 68,317 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமாக ரெட் விங் டீலர்கள் வாயிலாக இந்த வாகனத்தை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இரு விதமான வண்ண தேர்வுகளில் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, ஸ்ட்ராங் சில்வர் மெட்டாலிக் - கருப்பு (Strontium Silver Metallic with Black) மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் - கருப்பு (Sports Red with Black) ஆகியவை ஆகும்.

இதுமட்டுமின்றி இரு விதமான தேர்வுகளிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இவை ரூ. 68,317 மற்றும் ரூ. 73,317 என்ற விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஸ்டாண்டர்டு வேரியண்டைக் காட்டிலும் டீலக்ஸ் தேர்வில் சற்று தொழில்நுட்ப வசதிகள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும். இதன் விளைவாகவே அதன் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். அதாவது, இரு தேர்வுகளிலும் 110 சிசி, பிஜிஎம் ஃப்யூவல் இன்ஜெக்சன் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் இ-எஸ்பி வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 7.65 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 9 என்எம் டார்க்கை 4,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டதே இந்த மோட்டார். இந்த சூப்பரான எஞ்ஜினைத் தொடர்ந்து அதிக சூப்பரான இயக்க அனுபவத்தை வழங்கக் கூடிய சஸ்பென்ஷன் மற்றும் இதர சிறப்பு வசதிகள் இந்த பிரத்யேக இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், பின் பக்கத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், இன்டக்ரேடட் ட்யூவல் ஃபங்க்சன் ஸ்விட்சும், எக்ஸ்டர்னல் ஃப்யூவல் லிட் வசதியும், பாசிங் ஸ்விட்சும், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டரும் இரு சக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றைத் தொடர்ந்து மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு காம்பி டிஸ்க் பிரேக் சிஸ்டம் ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் எடிசனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஸ்டெப் இன்டிகேட்டர் மிக சிறந்த ஃப்யூவல் எஃபீசியன்சியை வழங்கும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால், மிக சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டியோவா இது வருகை தந்துள்ளது. மேலும், இந்த வாகனத்தை வழக்கமான ஹோண்டா டியோவுடன் மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் சில மாற்றங்களை வெளிப்புறத்தில் நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில், இருசக்கர வாகனத்தின் கவர்ச்சியை கூட்டும் விதமாக பிரத்யேக கிராஃபிக்குகள் மற்றும் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையை ஸ்கூட்டரின் ஸ்போர்ட்டி தோற்றை பல மடங்கு கூட்டிக் காட்டுகின்றன.

இருசக்கர வாகனத்தின் வருகைகுறித்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, அட்சுஷி ஒகாடா, கூறியதாவது, "டியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கவர்ச்சி மற்றும் இளமையின் அற்புதமான கலவையைக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இதன் புதிய பரிணாமமாகவே டியோ ஸ்போர்ட்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை கூடுதலாக மகிழ்விக்க மற்றும் ஈர்க்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
குறிப்பு: முதல் இரு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








