ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு போட்டியாக புதியதொரு அட்வென்ச்சர் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள காப்புரிமை படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, தற்போதைக்கு இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக். உண்மையில் ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு எதிர்பாராத வெற்றியினை சந்தையில் கொடுத்து கொண்டிருக்கிறோம் மாடல். குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இந்த நிலையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகாடா சமீபத்தில் அளித்த பேட்டியில், அடுத்த நிதியாண்டில் (2022 ஏப்ரல்- 2023 மார்ச்) தங்களது பிராண்டில் முதல் எலக்ட்ரிக் வாகனத்தை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜப்பானிய 2-வீலர்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் 150சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இந்த முயற்சிகளின் வெளிப்பாடாக ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் உலா வந்தன. நம் நாட்டு சந்தையில் ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கிற்கு யமஹா ஆர்15 மிக முக்கிய போட்டி மாடலாக விளங்கும். ஏனெனில் ஆர்15 பைக்கை சமீபத்தில் தான் யமஹா நான்காம் தலைமுறைக்கு அப்கிரேட் செய்திருந்தது (அதேநேரம் 3ஆம் தலைமுறை ஆர்15 வி3 பைக்கும் விற்பனைக்கு கிடைக்கிறது).

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

ஆனால், சிபிஆர்150ஆர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தற்போதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் HMSI நிறுவனம் தற்போது இந்திய சந்தைக்கான புதியதொரு மோட்டார்சைக்கிளாக சிஆர்எஃப்190எல் -க்கான காப்புரிமையை பெற்றுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆவண படத்தினை கீழே காணலாம்.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இந்த படத்தின் மூலம் சிஆர்எஃப்190எல் பைக்கிற்கான காப்புரிமை மனுவை HMSI நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்துள்ளதை அறிய முடிகிறது. இதற்கான ஒப்புதல் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் கிடைத்துள்ளது. அளவில் பெரிய ஹோண்டா சிஆர்எஃப்1100எல் பைக்கால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப நிலை அட்வென்ச்சர் பைக் சீனா உள்பட சில ஆசிய நாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

கடந்த 2021ஆம் ஆண்டில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஹோண்டா சிஆர்எஃப்190எல், ஹோண்டாவின் அட்வென்ச்சர் பைக்குகள் வரிசையில் சிபி150எக்ஸ் பைக்கிற்கு அடுத்ததாக நிலைநிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கும் சிபிஆர்190எல் ஆனது ஆஃப்-ரோட்டிற்கு தாராளமாக கொண்டு செல்லக்கூடிய மோட்டார்சைக்கிளாகும்.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 200 இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கிற்கு நேரெதிர் போட்டியாக இந்திய சந்தையில் விளங்கும். தோற்றத்தை பொறுத்தவரையில், சிஆர்எஃப்190எல் பைக்கில் முன்பக்கத்தில் செவ்வக வடிவில் ஹெட்லேம்ப், வட்ட வடிவிலான பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் நீண்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இவற்றுடன் பொருட்களை வைப்பதற்கான பெட்டகங்கள், டக்கர் பைக்குகளில் வழங்கப்படுவதை போன்றதான கிராஃபிக்ஸ், எண்டூரோ பைக்குகளை போன்றதான உடற் பேனல்கள், சரியாக மத்தியில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, சற்று மேலாக பொருத்தப்பட்ட ஹேண்டில்பார் போன்றவற்றையும் சிஆர்எஃப்190எல் பைக் பெறுகிறது. இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கில் ஓட்டுனர் இருக்கை ஆனது தரையில் இருந்து 830மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இது ஹீரொ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை காட்டிலும் 7மிமீ உயரமாகும். ஏறக்குறைய 145 கிலோ எடையில் உருவாக்கப்படும் இந்த ஹோண்டா பைக்கில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 240மிமீ அளவில் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையில் உள்ள ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் சிபி200எக்ஸ் பைக்குகளில் பொருத்தப்படும் அதே 184சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தான் சிஆர்எஃப்190எல் பைக்கிலும் வழங்கப்படுகிறது.

ஹோண்டாவின் புதிய 190சிசி அட்வென்ச்சர் பைக்... காப்புரிமையை பெற்றது!! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 -ஐ சமாளிக்குமா?

இதனாலேயே இந்தியாவில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறோம். அதிகப்பட்சமாக 17.3 பிஎஸ் மற்றும் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சிஆர்எஃப்190எல் பைக் மட்டுமின்றி, என்டி1100 பைக்கின் டிசைனிற்கான காப்புரிமையையும் இந்தியாவில் HMSI நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 1, 2022, 16:59 [IST]
English summary
Honda aquires patent for crf190l motorcycle in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+