பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனம் பைக் விலையை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா சிபி500எக்ஸ் (Honda CB500X) பைக் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரக பைக் ஆகும். இந்தியாவில் அட்வென்ஜர் டூரர் ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே சிபி500எக்ஸ் பைக் மீது ஹோண்டா நிறுவனத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால் ஹோண்டா நிறுவனம் எதிர்பார்த்தபடி, சிபி500எக்ஸ் பைக் விற்பனையில் சோபிக்கவில்லை. ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கிற்கு அதிக விலையை நிர்ணயம் செய்திருந்ததுதான் இதற்கு காரணம். அதிகப்படியான விலை காரணமாக ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை பலரும் விமர்சனம் செய்தனர்.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தபோது 6.87 லட்ச ரூபாயை விலையாக நிர்ணயம் செய்திருந்தது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த காரணத்தால், ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை வாங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டினர்.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த சூழலில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கின் விலையை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் விலை தற்போது 5.80 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதாவது ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் விலை 1.07 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு தற்காலிகமானதுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எனவே மீண்டும் விலை உயர்வதற்கு முன்னால், ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கை வாங்கி விடுவது நல்லது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471.03 சிசி, நான்கு-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக், எண்ட்ரி-லெவல் அட்வென்ஜர் டூரர் ரகத்தை சேர்ந்தது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure) போன்ற பைக்குகளில் இருந்து அப்டேட் ஆக நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் எடை 199 கிலோ ஆகும். இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 181 மிமீ. இது ஓரளவிற்கு சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ்தான். அதே சமயம் ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17.7 லிட்டர்களாக உள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் 310 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கின் முன் பகுதியில் விண்டுஸ்க்ரீனும் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்ப்பதுடன், காற்று அறைவதில் இருந்து ரைடருக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

பைக் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஹோண்டா... எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹோண்டா சிபி500எக்ஸ் பைக் மீது வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்த மிகப்பெரிய குறையே அதன் அதிகப்படியான விலைதான். தற்காலிகமானது என்றாலும் கூட, தற்போது விலை மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டிருப்பதால், சிபி500எக்ஸ் பைக்கின் விற்பனை உயரும் என ஹோண்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 15, 2022, 9:37 [IST]
English summary
Honda cb500x adventure tourer gets a massive price cut
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+