உலகளவில் விற்பனைக்கு வர தயார்... பைக் காதலர் அல்லாதோரை கூட Hondaவின் இந்த Hawk 1100 லவ் பண்ண வச்சிடும் போல!
மிக மிக விரைவில் உலகளவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹோண்டா ஹாவ்க் 1100 (Honda Hawk 1100) பைக்கின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, வெகு விரைவில் புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஹோண்டா ஹாவ்க் 1100 (Honda Hawk 1100) எனும் பைக்கையே நிறுவனம் மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.இதன் வருகை வரும் மார்ச் மாதம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 19 - மார்ச் 22 ஆகிய தேதிகளுக்குள் இதன் வெளியீடு அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது. ஒசாகா மோட்டார்சைக்கிள்ஸ் வாகன கண்காட்சி (Osaka Motorcycles Show)-லேயே இந்த பைக் வெளியீடு பெற இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ் நிலையில் அனைவரும் பைக்கின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேலையில், ஹோண்டா நிறுவனம் புதிய ஹாவ்க் 1100 பைக்கின் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது.

இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த செயலை அது செய்துள்ளது. ஹோண்டாவின் இந்த நடவடிக்கை பைக் காதலர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளதே என்றே கூறலாம். ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை சிவி4 இன்டர்செப்டார் கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கியிருக்கின்றது.

இந்த கான்செப்ட் மாடலை 2019ம் ஆண்டில்தான் முதல் முறையாக ஹோண்டா நிறுவனம் காட்சிப்படுத்தியது. என்னதான் இந்த கான்செப்ட் மாடலை தழுவி ஹாவ்க் 1100 பைக் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சற்றே தனித்துவமான ஸ்டைலில் காட்சியளிப்பதை நாம் யாராலும் மறுக்க முடியவில்லை.

ரெட்ரோ-ஸ்டைலில் இப்பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக பப்பிள் பேனுலுடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், க்ளிப்-ஆன் பார், ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை (சற்றே குண்டாகவும் இது தெரிகின்றது), அப்ஸ்வெப்ட் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் ஹோண்டா ஹாவ்க் 1100 பிரத்யேகமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

ஹோண்டா ஆப்பிரிக்கா சிஆர்எல்எஃப் 1100 எல் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே மோட்டோரே ஹாவ்க் 1100 பைக்கிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவல் மற்றும் பைக்கின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் என அனைத்தும் விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், எப்போது வேண்டுமானாலும் இந்த பைக்கின் வருகை உலக சந்தையில் எதிர்பார்க்கலாம் என்கிற நிலையே தற்போது நிலவுகின்றது. ஹோண்டா நிறுவனம் புதிய கஃபே ரேசர் ரக மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக சமீப சில காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த தகவல் வெளியாகிய முதல் நாளிலிருந்தே இருசக்கர வாகன பிரியர்கள் இப்-பைக்கின் வருகை பெருத்த ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது ஹாவ்க் 1100 கஃபே ரேசர் ரக மோட்டார்சைக்கிளின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இருசக்கர வாகனத்திற்கு உலக டூ-வீலர்கள் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Source: visordown
குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








