பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இந்தியர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தின் புதிய தலைமுறை வெர்ஷனையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் மிக சமீபத்திலேயே சிபி 300எஃப் எனும் புதுமுக இருசக்கர வாகனத்தை அறிமகப்படுத்தியது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இதனைத்தொடர்ந்தே நிறுவனம் புதிய தலைமுறை ஆக்டிவாவையும் அறிமுகம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் புதிய டீசர் படம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கின்றது. இந்த டீசர் படம் முகப்பு பகுதியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. அதேவேலையில், முகப்பு பகுதி முழுமையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை ஆக்டிவா 7ஜி எனும் மாடலில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வெர்ஷனுக்கு ஏற்கனவே இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. தற்போது நிறுவனம் 6ஜி மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அது விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா ஆக்டிவா பிரியர்களுக்கு புதிய விதமான ரைடிங் அனுபவம் வழங்கும் பொருட்டு நிறுவனம் அடுத்த தலைமுறை ஆக்டிவாவை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மிக சிறப்பாக விற்பனையாகும் தயாரிப்பாக ஆக்டிவா இருக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாகவும் இது இருக்கின்றது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

ஹோண்டா நிறுவனத்தின் பிற பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டராக ஆக்டிவா 125, கிரேஸியா 125 மற்றும் டியோ ஆகிய இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் பிற இருசக்கர வாகன மாடல்களைப் போலவே புதிய ஆக்டிவா 7ஜியும் பன்முக வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அது, ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட்ஸ் மற்றும் நார்மல் ஆகிய வேரியண்டுகளிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

ஆனால், இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதேபோல் என்ன மாதிரியான மோட்டார் வசதியுடன் அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது தெரியவில்லை. அதேவேலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் புதிய ஆக்டிவா 7ஜி புதுப்பிக்கப்பட்ட 110சிசி மோட்டார், பேன் கூல்டு, 4 ஸ்ட்ரோக் மோட்டாருடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இவற்றுடன் சேர்த்து புதிய 7ஜி ஆக்டிவா சற்று மாறுபட்ட தோற்றத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றது. பேனல் மற்றும் ஹெட்லைட் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர பின்பக்கத்திலும் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இதேபோல், சற்றே சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் சஸ்பென்ஷன் செட்-அப், சூப்பரான பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகிய அம்சங்களும் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் புதிய வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

முன்னதாக ஹோண்டா நிறுவனம் சிபி 300எஃப் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக திங்கட்கிழமை அன்று அறிவித்தது. இந்த பைக் ரூ. 2.26 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது சற்றே அதிக பவர்ஃபுல் டூ வீலர் ஆகும். இந்த வாகனத்தில் நிறுவனம் 293 சிசி மோட்டாரைப் பயன்டுத்தியிருக்கின்றது.

பழைய ஆக்டிவாவை ஓட்டி ஓட்டி ரொம்ப வெறுத்துட்டீங்களா?.. புதிய தலைமுறையை களமிறக்க போறாங்களாம்!

இது ஓர் 4 வால்வுகள் கொண்ட எஸ்ஓஎச்சி மோட்டார் ஆகும். இதில், அட்வான்ஸ்ட் ஆயில் கூலிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட பைக்கையே நிறுவனம் தற்போது ஹோண்டா வெளியீடு செய்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல புதுமுக வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்தியாவை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்கும் பொருட்டு இந்த பணியில் அது களமிறங்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 9, 2022, 18:13 [IST]
English summary
Honda planning to launch new gen activa in india here is teaser
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+