பிரபல மாடலின் விலையை 10 லட்சம் ரூபா வரை குறைத்த ஹோண்டா... அட சூப்பரு! இப்பவே வாங்கிவிட வேண்டியதுதான்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் பிரபல பைக் மாடலான சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர் ஃபையர் பிளேடின் (Honda CBR1000RR-R Fireblade) விலையில் ரூ. 10 லட்சம் வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா அதன் சூப்பர் ஸ்போர்ட் ரக இருசக்கர வாகனமான சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபையர் பிளேட் (Honda CBR1000RR-R Fireblade) மாடலின் விலையை யாரும் எதிர்பார்த்திராத அளவில் குறைத்திருக்கின்றது. ரூ. 10 லட்சம் வரை அது குறைத்துள்ளது.

ஹோண்டாவின் பிரமாண்ட தள்ளுபடி இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சமீப காலமாக வாகன கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிரடியாக ரூ. 10 லட்சம் விலையை ஃபையர் பிளேட் மாடல் பைக்கின் விலையை ஹோண்டா குறைத்திருக்கின்றது. இதனால் முன்னதாக ரூ. 33 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த இப்பைக் தற்போது ரூ. 24.02 லட்சத்திற்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

என்னதான் ஹோண்டா பல லட்சங்களைக் குறைத்திருந்தாலும் இந்த பைக் தற்போது பட்ஜெட் வாகன பிரியர்கள் வாங்க முடியாத அளவிற்கு மிக உயரிய விலையிலேயே தற்போதும் கிடைக்கின்றது. இருப்பினும், இருசக்கர வாகனங்களின்மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம் இந்த பைக்கை இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எஸ்டிடி கருப்பு மற்றும் எஸ்டிடி சிவப்பு ஆகிய நிற தேர்வுகளிலேயே சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர் ஃபையர் பிளேட் கிடைக்கின்றது. இதில், கருப்பு நிற தேர்வின் விலையே ரூ. 24,02,009 ஆகும். சிவப்பு நிற வேரியண்டின் விலை ரூ. 24,53,437 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு விலைகளும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இப்பைக்கிற்கு போட்டியாக டுகாட்டி பனிகேல் வி4 மற்றும் அப்ரில்லா ஆர்எஸ் வி4 உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் இருக்கின்றன. இவற்றிற்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே ஹோண்டா நிறுவனம் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது.

இருப்பினும், இரு போட்டி மாடல்களும் ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர்-ஆர் பைக்கைக் காட்டிலும் சில ஆயிரம் ரூபாய் வரை குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் 999 சிசி இன்லைன்-4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு, 16 வால்வு மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரை 14,500 ஆர்பிஎம்மிலும், 113 என்எம் டார்க்கை 12,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த உச்சபட்ச திறன் கொண்ட மோட்டாருடன் சேர்த்து போஷ் நிறுவனத்தின் 6 ஆக்சிஸ் ஐஎம்யூ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து த்ரோட்டில் பை ஒயர், மூன்று ரைடிங் மோட்கள், ஏபிஎஸ், வீலி கன்ட்ரோல், ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் மற்றும் லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








