பெரும் விற்பனை சரிவில் முன்னணி நிறுவனம்... மக்கள் மத்தியில் இதோட தயாரிப்புகளுக்கு மவுசு குறைஞ்சுட்டு வருதா?

பெரும் விற்பனை சரிவை 2022 பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் பெரும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக காட்சியளிக்கும் ஹோண்டாவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த இருசக்கர வாகன உலகையுமே அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்கின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

நிறுவனம் 2022 பிப்ரவரி மாதத்தில் 3,12,621 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த எண்ணிக்கை மிகப் பெரியதாகத் தென்பட்டாலும் முந்தைய 2021ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் பன் மடங்கு குறைவானது இது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 2021 பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 4,42,696 யூனிட்டுகள் வரை இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

இதைக் காட்டிலும் நடப்பு பிப்ரவரி மாதத்தில் பெற்றிருப்பது மிக மிக குறைவான விற்பனை எண்ணிக்கை என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். 29 சதவீதம் சரிவை நிறுவனம் 2022 பிப்ரவரியில் சந்தித்திருக்கின்றது. இது மாபெரும் சரிவாகும். இந்த விற்பனை சரிவினால் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

உள்நாட்டில் ஹோண்டா இருசக்கர வாகனங்களை இந்தியர்கள் வாங்குவது குறைந்திருக்கின்ற காரணத்தினாலேயே இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் சிக்கியிருக்கின்றது. உள் நாட்டு சந்தையில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் 2,85,677 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

அதேவேலையில், 26,944 யூனிட்டுகள் வரை வெளிநாடுகளுக்கு ஹோண்டா டூ வீலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் கணிசமான சரிவு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக உள்நாட்டு விற்பனை 31 சதவீதம் விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளது. வாகனங்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலையும் தொடர்ச்சியாக ஏறுமுகத்தைச் சந்தித்து வருவதே ஹோண்டா நிறுவனத்தின் பெரும் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

ஹோண்டா நிறுவனம் மட்டுமின்றி இன்னும் பிற முன்னணி நிறுவனங்களும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றன. இதற்கும் தொடர் விலைவாசி உயர்வே காரணமாக கூறப்படுகின்றது. அதேவேலையில், நாட்டு மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

பலர் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அவை அதிக தொழில்நுட்பம் மற்றும் சூப்பரான பயன்பாட்டு வசதிகளுடன் விற்பனைக்குக் வருகின்றன. எனவே பலர் மின் வாகனங்களை வாங்குவதே சிறந்தது என கருதுகின்றனர்.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

அதேவேலையில் அரசும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. மின் வாகன விலையைக் குறைக்கும் வகையில் மானியம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுத்தல் உள்ளிட்டவற்றை அரசு மேற்கொண்டு வருகின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

இதன் விளைவாக பெட்ரோல் வாகனங்களின் விற்பனைக் குறைந்தும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைச் சமீப காலமாக அதிகரித்தும் காணப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி அமைந்திருக்கின்றது. நிறுவனம் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் பன்முக முயற்சிகளை நாட்டில் மேற்கொண்டு வருகின்றது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

குறிப்பாக, கடந்த மாதம் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350ஆர்எஸ் பைக்குகளை நாட்டில் கிடைப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதுதவிர, பிரீமியம் இருசக்கர வாகன விற்பனை மையமான பிக்விங் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தியது.

பெரும் விற்பனை சரிவில் சிக்கிய ஹோண்டா டூ-வீலர் நிறுவனம்... மக்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மவுசு குறைய ஆரம்பிச்சிருச்சா?

அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியர்புர், ஆந்திராவின் ராஜாமுந்திரி, கர்நாடகாவின் பெலகவி மற்றும் மஹாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் புதிய பிக்-விங் ஷோரூம்களை நிறுவியது. இதுதவிர, சாலை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வழங்குதள் உள்ளிட்ட சில சமூக சேவைகள் சிலவற்றையும் ஹோண்டா செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2022, 12:43 [IST]
English summary
Honda two wheelers registers 312621 unit sales in india in february 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+