யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய ஹோண்டா வரியோ 160சிசி ஸ்கூட்டர் இந்தோனிஷிய நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய 160சிசி ஹோண்டா ஸ்கூட்டரை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

2006இல் இருந்து ஹோண்டா வரியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனையில் இருப்பது 7ஆம் தலைமுறை வரியோ ஆகும். இந்தியாவில் விற்பனையில் இல்லாவிடினும், இந்தோனிஷிய நாட்டு சந்தைகளில் ஜப்பானிய 2-வீலர் பிராண்டான ஹோண்டாவின் வரியோ ஸ்கூட்டர்கள் பிரபலமானவைகளாக உள்ளன.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

அதிலிலும் குறிப்பாக, 125சிசி வரியோ ஸ்கூட்டர் இந்தோனிஷியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக உள்ளது. வரியோ 150 ஸ்கூட்டரும் அந்த நாட்டில் விற்பனையில் உள்ள நிலையில், இதனுடன் புதிய தலைமுறை வரியோ 160 ஸ்கூட்டரினை ஹோண்டா 2-வீலர்ஸ் இணைத்துள்ளது. ஸ்கூட்டர்களிலும் ஆற்றல்மிக்கவைக்கான சந்தை அதிகரித்து வருகிறது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

புதிய ஹோண்டா வரியோ 160 ஆனது காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன், செயல்திறன் அப்கிரேட்களையும் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் வரியோ ஸ்கூட்டர்களின் வழக்கமான கூர்மையான லைன்களை காட்டிலும், மேக்ஸி-ஸ்கூட்டர்களை போன்று அதிகளவில் ஸ்டைலான லைன்களை கொண்டுள்ளது. ஆனால் உண்மையில், ஹோண்டா வரியோ ஆனது ஒரு பக்கா மேக்ஸி ஸ்கூட்டர் கிடையாது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

புதிய வரியோ 160 ஸ்கூட்டர் வழக்கத்தை காட்டிலும் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இதன் தோற்றம் சுஸுகியின் பர்க்மேன் ஸ்கூட்டர்களை தான் ஞாபகப்படுத்துகிறது. ஏனெனில் இத்தகைய ஸ்கூட்டர்களில் முன்பக்க ஃபெண்டரில் அதிகளவில் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல் உடன் முற்றிலும் புதிய இரட்டை-பீம் எல்இடி ஹெட்லேம்ப் 2022 வரியோ 160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்த ஹெட்லேம்ப் அமைப்பு முன்பை காட்டிலும் சற்று மேல்நோக்கி பொருத்தப்பட்டுள்ளதால், ஸ்கூட்டரின் கோப முகம் மெருகேறியுள்ளது. இரட்டை ஹெட்லேம்ப்களுக்கு மேலே எல்இடி பொசிஷன் விளக்குகள் உடன் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பேனல்கள் பக்கவாட்டிற்கும் வளைக்கப்பட்டுள்ளதால், ஸ்கூட்டருக்கு பருமனான தோற்றம் கிடைத்துள்ளது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

பக்கவாட்டில் 'Vario' எழுத்துகள் முப்பரிமாணத்தில் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள கூர்மையான லைன்கள் பின்பக்கத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்கூட்டரின் பின் முனைப்பகுதி நீட்டிக்கப்பட்டதாக உள்ளது. இத்துடன் இறுதிமுனையில் வழங்கப்பட்டுள்ள ஒற்றை-துண்டு க்ராப் ரெயில் வரியோ 160 ஸ்கூட்டருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

ஃப்ளோர் போர்டு, எக்ஸாஸ்ட் மஃப்லர், அலாய் சக்கரங்கள், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் உள்ளிட்டவை கருப்பு நிற பேனல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாருக்கு மேலே வழங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கண்ணாடி ஆனது இரட்டை-நிறத்தில் ஸ்போர்டியான தோற்றத்தை ஸ்கூட்டருக்கு கொடுக்கிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை வரியோ 160 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இது எரிபொருள் அளவு, பயணம் செய்யப்பட்ட தூரம், உட்கொள்ளப்படும் சராசரி எரிபொருள் மற்றும் ஸ்கூட்டரின் வேகம் உள்ளிட்டவற்றை காட்டக்கூடியதாக உள்ளது. மற்றப்படி எந்தவொரு இணைப்பு வசதியும் வரியோ 160-இல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை. இருக்கைக்கு அடியில் வெறும் 18 லிட்டர்கள் கொள்ளளவில் இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. போதிய அளவில் வழங்கப்பட்டுள்ள இந்த பகுதியில் யுஎஸ்பி சார்ஜர் நிலையானதாக கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வரியோ 160-இல் 160சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎச்பி மற்றும் 13.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்தோனிஷிய நாட்டு சந்தையில் வரியோ 160-க்கு யமஹா ஏரோக்ஸ் 155 போட்டியாக விளங்குகிறது. வரியோ 160-இன் அதிகப்பட்ச இயக்க ஆற்றலை இந்த யமஹா ஸ்கூட்டர் கிட்டத்தட்ட பெறுகிறது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

ஹோண்டா வரியோவில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது இயக்க ஆற்றலை ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு வழங்குகிறது. புதிய வரியோ 160-இல் 14-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தோனிஷியாவில் சிபிஎஸ் மற்றும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் வரியோ 160 விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா ஏரோக்ஸ் 155-க்கு போட்டியாக, ஹோண்டாவின் புதிய வரியோ160 ஸ்கூட்டர்!! இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இதில் ஏபிஎஸ் வேரியண்ட்டில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் இருசக்கரங்களிலும் பிரேக்கிங் பணியை கவனிக்க டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வரியோ 160-இன் இரு வேரியண்ட்களின் விலைகள் இந்தோனிஷிய நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.34 லட்சம் மற்றும் ரூ.1.48 லட்சம் என உள்ளன. இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 3, 2022, 22:13 [IST]
English summary
New Honda Vario 160cc Scooter Debuts – Yamaha Aerox 155 Rival.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+