சூப்பரான விலையில் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்... ரிவோல்ட் ஆர்வி400 இ-பைக்கிற்கு வேற லெவல் ஆப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாப் ஆக்ஸோ (HOP OXO) எலெக்ட்ரிக் பைக் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹாப் எலெக்ட்ரிக் (Hop Electric) இறுதியாக அதன் எலெக்ட்ரிக் பைக் ஹாப் ஆக்ஸோ (HOP OXO)-வை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டநிலையில் இன்று (செப்டம்பர் 05) அதனை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகமாக ரூ. 1.25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கை நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் தளம் (விற்பனையகம்) அல்லது ஆன்லைன் தளம் வாயிலாக வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இந்த இருசக்கர வாகனத்திற்கு புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வாயிலாக அது ஏற்கப்படுகின்றது. மக்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புக்கிங்கை நிறுத்துமளவிற்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டுள்ளது. காத்திருப்பு காலத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் புக்கிங் கிடைத்த காரணத்தினாலேயே ப்ரீ புக்கிங் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையிலேயே இன்று அதிகாரப்பூர்வமாக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இரு விதமான வேரியண்டுகளில் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கும். ஆக்ஸோ மற்றும் ஆக்ஸோ எக்ஸ் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இவ்விரு தேர்வுகளிலும் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

6200 வாட் பவரை வெளியேற்றக் கூடிய 72 வோல்ட் மின்சார மோட்டாரே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 200 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். அதேவேலையில், இந்த மின்மோட்டார் வெறும் 4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டுள்ளது.

மிக சூப்பரான ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக எலெக்ட்ரிக் பைக்கில் 3.75 KWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி பேக்கை பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 4 மணி நேரங்களே போதுமானது. 16 ஆம்ப் சாக்கெட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் எலெக்ட்ரிக் பைக் சார்ஜாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய இருசக்கர வாகனமாக ஹாப் ஆக்ஸோ இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஐந்து அங்குல அட்வான்ஸ்ட் இன்ஃபர்மேஷன் திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஐபி67 ரேட்டிங் பெற்ற திரையாகும். தடையில்லா சேவையை வழங்கும். அதாவது, மழை, தூசி என எவற்றினாலும் இந்த திரை பாதிப்படையாது.

இதுதவிர, ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கில் ரீ-ஜெனரேட்டிஹ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது லேசாக மின்சாரத்தை மீட்டெடுக்க உதவும். இத்துடன், 4ஜி இணைப்பு மற்றும் செல்போனை இணைக்கக் கூடிய செயலி வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த செயலி வாயிலாக பைக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், இருசக்கர வாகனத்தை இணைக்கும் வசதி, திருட்டை தவிர்க்கும் வசதி, ரைடு ஸ்டார்ட் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும்.

ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கில் பன்முக ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக 3 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அழை ஆகும். கூடுதலாக டர்போ மோடும் இந்த இடம் பெற இருப்பதாக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலே பார்த்த அறிமுக விலை ஆக்ஸோ தேர்வின் விலை ஆகும். அதாவது, ரூ. 1,24,999 என்பது ஆரம்ப நிலை வேரியண்டான ஹாப் ஆக்ஸோவின் விலை ஆகும். உயர் நிலை தேர்வாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கும் ஆக்ஸோ-எக்ஸ் தேர்விற்கு ரூ. 1,39,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலைகள் பெட்ரோல் பைக்குகளின் விலைக்கு சமமான விலையில் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஹாப் ஆக்ஸோவின் வருகை இந்திய சந்தையில் ரிவோல்ட் ஆர்வி400, ஓபன் ரோர் மற்றும் டார்க் கர்டோஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. விலை மற்றும் சிறப்பம்சம் என அனைத்திலும் மிக சிறந்த போட்டியாளனாக இப்பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வசதியை நிறுவனம் தற்போது இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் தொடங்கி வைத்திருக்கின்றது. இந்த பணியை மேலும் சில நகரங்களுக்கு விரிவாக்கும் செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








